நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம், அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு
2022-05-14@ 12:36:03

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்திற்கு நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு சென்னை காமராஜர் சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் 8 அடி உயரமுள்ள முழு உருவச் சிலையை நிறுவி 21.07.2006 அன்று திறந்து வைத்தார். வழக்கின் காரணமாக அச்சிலை அகற்றப்பட்டு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலையை, சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, மணிமண்டபத்தின் வெளிப்புறத்தில் சிலையை நிறுவுவதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன் அவர்களால் 14.4.2022 அன்று பாரத ரத்னா, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132-ஆவது பிறந்த நாளன்று வழங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையினை மணிமண்டபத்தில் நிறுவுவதற்கான இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
அற்புதம் நிகழ்த்திய அற்புதம்மாள்; 30 ஆண்டு அநீதி வீழ்த்தப்பட்டது!: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை.. தலைவர்கள் வரவேற்பு..!!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு..!!
நடிகர் தனுஷின் 'Wunderbar films' தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனல் மீண்டும் செயல்பட தொடங்கியது
கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு
நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் மதுரை வருகை, அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது: எம்.பி. சு. வெங்கடேசன்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!