பணியில் இருக்கும் போது பயணியால் அடித்துக் கொல்லப்பட்ட அரசு பேருந்து நடத்துநர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
2022-05-14@ 12:32:15

சென்னை: பணியில் இருக்கும் போது பயணியால் அடித்துக் கொல்லப்பட்ட அரசு பேருந்து நடத்துநர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று அதிகாலை 3.15 மணியளவில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கிளையைச் சார்ந்த அரசுப் பேருந்து சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வரும்போது, மதுராந்தகத்தில் குடிபோதையில் பேருந்தில் ஏறிய முருகன் என்ற பயணியிடம் நடத்துநர் தி.பெருமாள் பிள்ளை, பயணச்சீட்டு எடுக்க வலியுறுத்திய போது, அந்தப் பயணி நடத்துநரைத் தாக்கியுள்ளார்.
இதன் காரணமாக, நடத்துநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக அவர் மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தத் துயரமான செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் திரு. தி.பெருமாள் பிள்ளை அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு உடனடியாக பத்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு..!!
நடிகர் தனுஷின் 'Wunderbar films' தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனல் மீண்டும் செயல்பட தொடங்கியது
கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு
நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் மதுரை வருகை, அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது: எம்.பி. சு. வெங்கடேசன்
சென்னையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி 98 பேர் பலி!!
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!