SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

இல்லத்தரசிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!: சென்னையில் ரூ.38 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை.. சவரன் ரூ.37,896-க்கு விற்பனை..!!

2022-05-14@ 11:00:04

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.37,896-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அண்மைக்காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் நேற்று நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் தங்கம் சவரனுக்கு ரூ.472 குறைந்து, ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலையானது அதிரடியான சரிவை கண்டிருக்கிறது.

அதன்படி, சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.18 குறைந்து 4,737 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37,896 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசு அதிகரித்து ரூ.63.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்