இலங்கைக்கு ரூ.15,000 கோடி கடன் வழங்க ஜப்பான் இசைவு!: புதிய பிரதமர் ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி என கணிப்பு..!!
2022-05-14@ 10:30:12

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்ற 3வது நாளே அந்த நாட்டுக்கு சுமார் 15,000 கோடி ரூபாயை வழங்க ஜப்பான் இசைவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 360 ரூபாயாக சரிவை கண்டுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்கேவின் வருகை அந்த நாட்டு பொருளாதாரத்துக்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்கான சமிஞ்சைகளை அளித்துள்ளன.
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட பூஜ்யம் என்றாகிவிட்ட நிலையில் அதனை அதிகரிக்கும் முயற்சியில் ரணில் விக்ரமசிங்கே இறங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தையில் பல நாடுகள் கடன் கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஜப்பான் மட்டும் சுமார் 15,497 கோடி ரூபாயை கடனாக வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்றுமதி நிதி அளிப்பு நிறுவனமான இந்திய எக்சின் வங்கி இலங்கைக்கு 10,000 கோடி ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதாரம் சார்ந்த பேச்சுவார்த்தைகளில் ரணில் விக்ரமசிங்கே ஈடுபடவுள்ளார். தற்போது இலங்கையில் போராட்டக்காரர்களை கண்டதும் சுட ராணுவத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதால் இரண்டு நாட்களாக போராட்டங்கள் குறைந்துள்ளன. எனிலும் ரணிலுக்கு எதிரான மக்களின் கோபம் இதுவரை குறையவில்லை.
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் கடும் குழப்பம் கருக்கலைப்புக்கு அனுமதி தந்த உயர் நீதிமன்றங்களால் பரபரப்பு: உடனடி தடை விதித்தது உச்ச நீதிமன்றம்
மேற்கு நாடுகளின் மீதான கோபத்தை உக்ரைன் மக்கள் மீது காட்டும் ரஷ்யா: குடியிருப்புகளை தாக்குவதன் பின்னணி
ஈரானில் நிலநடுக்கம் 5 பேர் பலி
மெல்ல மெல்ல குறையும் கொரோனா; உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 55.35 கோடியை தாண்டியது.! 63.59 லட்சம் பேர் உயிரிழப்பு
ஈரானின் பந்தர்அப்பாஸ் நகரின் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவு.! 3 பேர் உயிரிழப்பு
தஞ்சை மியூசியத்தில் இருந்து காணாமல் போன 300 வருட பழமையான புராதன பைபிள் லண்டலின் கண்டுபிடிப்பு..!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்