குழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ முகாம்
2022-05-14@ 00:41:21

வாலாஜாபாத்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட சார்பில் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு முகாம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். கலெக்டர் ஆர்த்தி முகாமை துவக்கி வைத்தார். அப்போது, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள் என்னென்ன கொடுக்க வேண்டும், பிறந்தது முதல் 6 வயது வரை குழந்தைகளுக்கு என்ன சத்தான உணவுகளை வழங்க வேண்டும். தமிழக அரசு குழந்தைகளுக்கு செய்யும் நல திட்டங்கள், மருத்துவ வசதிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். மேலும், குழந்தைகளுக்கான தானிய உணவு, காய்கறிகள், கீரை, பழ வகைகள், மாவுச்சத்து உணவு வகைகள் காட்சி நடந்தது.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ், ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், அமல்ராஜ், தாசில்தார் லோகநாதன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சுசித்ரா, ஊத்துக்காடு ஊராட்சி தலைவர் சாவித்திரி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
விவசாயிகள், தொழில்துறைக்கு அடுத்த ஆபத்து கூறுபோடப்படும் மின்துறை
எனது அறக்கட்டளைக்கு அனுப்பிய பணம் எவ்வளவு? பாடலாசிரியர் சிநேகன் மீது நடிகை ஜெயலட்சுமி புகார்
50 சதவீத மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்கினால் கல்லூரிகளை நடத்துவது சிரமம்: ஐகோர்ட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகள் வாதம்
தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன?: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை
நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார்; போதைப் பொருள் ஒழிப்பு பிரசாரம்: கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுக்கின்றனர்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!