அறிவியல் வரலாற்றில் மைல் கல் நிலவு மண்ணில் செடி முளைத்தது: நாசா விஞ்ஞானிகள் சாதனை
2022-05-14@ 00:18:42

வாஷிங்டன்: அறிவியல் வரலாற்றில் முதல் முறையாக, நிலவில் இருந்து கொண்டு வந்த மண்ணில் செடிகளை வளர்த்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். நிலவில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில், நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய அப்பல்லோ விண்கலம் தனது 11, 12 மற்றும் 17வது விண்வெளி பயணத்தின் போது, நிலவில் இருந்து பூமிக்கு அனுப்பிய மண் மாதிரிகளை கொண்டு செடிகளை வளர்க்க அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். இந்த முயற்சியில் நாசா விண்வெளி மையமும் இணைந்தது. அப்பல்லோ விண்கலத்தின் 3 பயணங்களின் போதும் நிலவில் இருந்து மொத்தம் 12 கிராம் மண் மட்டுமே எடுத்து வரப்பட்டிருந்தது.
* ஒவ்வொரு செடிக்கும் ஒரு கிராம் அளவுள்ள மண் மட்டுமே ஆய்வுக்காக ஒதுக்கப்பட்டது.
* அதனுடன் நீர் மற்றும் செடிகளின் விதைகளை சேர்த்து, தூய்மையான அறையில் சீலிடப்பட்ட கண்ணாடி பெட்டிகளில் சூரிய ஒளி, காற்று கிடைக்கும் வகையில் வைத்தனர்.
* நிலவு மண் ஊட்டச்சத்து குறைவானது ன்பதால், தினசரி ஊட்டச்சத்து கரைசல் ஊற்றப்பட்டது. கூடுதலாக, அவற்றுடன் அரபிடோப்சிஸ் செடியின் விதைகளும் சேர்க்கப்பட்டது.
* சில நாட்களில் விதைகள் அனைத்தும் முளைத்து இருந்தன. இதன் மூலம், நிலவு மண்ணில் செடி முளைக்கும் என்பதை உறுதியாகி இருக்கிறது.
* இருப்பினும், இவை பூமியில் விளையும் செடிகளை போன்று வலுவாக இல்லை. மிக மெதுவாகவும் வளர்ந்தன. வேர்களின் வளர்ச்சி தடைபட்டது.
* சில செடிகளில் இலைகள் கூட வளர்ச்சி அடையவில்லை. சிவப்பு நிறத்தில் புள்ளிகள் காணப்பட்டன. - இருப்பினும், இந்த ஆராய்ச்சி நாசாவின் விண்வெளி ஆய்வின் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.
மேலும் செய்திகள்
கொலம்பியா நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கைதிகள் உடல் கருகி உயிரிழப்பு..பலருக்கு பலத்த தீக்காயம்!!
லாரியில் அடைக்கப்பட்ட 51 அகதிகள் மூச்சுத் திணறி பலியான சம்பவம்... இதயத்தையே நொறுக்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் வேதனை!!
அமெரிக்க டாலரை ஓரம் கட்ட அதிரடி; சிறு நாடுகளை வளைக்க சீனா அடுத்த சதி திட்டம்; யுவானில் கடன் வழங்க புதிய நிதியம்
பொது விவாதம், தகவல் பரவல் உட்பட கருத்து சுதந்திரத்துக்கு பாதுகாப்பு; ஜி7 மாநாட்டில் மோடி உறுதி
ரணிலின் நீண்ட போராட்டத்துக்கு வெற்றி.! அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
மீண்டும் அதிரடி தாக்குதல் உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்; 16 பேர் பலி; 59 பேர் காயம்
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!