சில்லி பாயின்ட்...
2022-05-14@ 00:13:40

* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரலியோ), இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். மேலும், சிகிச்சைக்காக உடனடியாக நாடு திரும்பியுள்ளார்.
* சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும் வேகம் உம்ரன் மாலிக், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகத்தில் பந்து வீசிய சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து 155 கிமீ வேகத்தில் பந்து வீசி வரும் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல், ‘உம்ரன் மாலிக் பாகிஸ்தானில் இருந்திருந்தால் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருப்பார். இந்தியாவில் இப்போது பும்ரா, சைனி, சிராஜ், ஷமி என தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய உள்ளனர். அதனால்தான் அவர்களுக்கு வீரர்களை தேர்வு செய்வது கடினமாகி உள்ளது’ என்று கூறியுள்ளார்.
* பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் (30). அவர் சமீபத்தில் நியூசிலாந்தில் நடந்த டி20 உலக கோப்பையில் விளையாட தனது கைக்குழந்தை, அம்மாவுடன் சென்றிருந்தார். இந்நிலையில், இங்கிலாந்தில் ஜூலையில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் பிஸ்மா குழந்தையுடன் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் அணியில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
Tags:
சில்லி பாயின்ட்மேலும் செய்திகள்
விம்பிள்டன் டென்னிஸ் 4வது சுற்றில் அனிசிமோவா
சதம் விளாசினார் ஜடேஜா முதல் இன்னிங்சில் இந்தியா 416 ரன் குவிப்பு
இம்மாதம் ஐசிசி கூட்டம் ஐபிஎல் ஆட்டங்கள் அதிகரிக்குமா?
மகளிர் உலக கோப்பை ஹாக்கி முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் வெற்றி: இங்கிலாந்து - இந்தியா இன்று மோதல்
ஒரே ஓவரில் 35 ரன்! பும்ரா உலக சாதனை
விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றில் மரியா சக்கரி ஏஞ்சலிக் கெர்பர் தோல்வி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்