ரசாயன கழிவுகள் கலந்து வருவதால் கெலவரப்பள்ளி அணையில் நுங்கும் நுரையுமாக காணப்படும் தண்ணீர்
2022-05-13@ 19:11:03

ஓசூர்: தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் நந்திமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நீர் தமிழகத்தின் கொடியாளம் வழியாக கெலவரப்பள்ளி அணைக்கு வந்தடைகிறது. இதனால், ஓசூர் கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று 480கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 593கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 480கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28அடியில் தற்போது 40.18 அடிக்கு தண்ணீர் உள்ளது.
இதேபோல் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நேற்று வினாடிக்கு 505கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 279கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 12கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 47.14அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனிடையே கர்நாடக மாநில ஆற்றங்கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கப்படும் ரசாயன கழிவுகளை ஆற்றில் நீர் அதிகரிக்கும் போது வெளியேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதேபோல் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ரசாயன கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நுங்கும் நுரையுமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதிலும் குவியல் குவியலாக நுரை பொங்கி காணப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அம்பானி, அதானிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய அரசு: டி.ராஜா தாக்கு
மூச்சு திணறல் நோயால் குழந்தை அவதி மகள்-மகனை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை: கரூர் அருகே சோகம்
பழநி முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி திடீர் தரிசனம்
தொடர்ந்து 12 மணிநேரம் 1330 திருக்குறளுக்கேற்ப பரதநாட்டிய கலைஞர்கள் நடனமாடி சாதனை
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி என்எல்சி ஊழியர் ரூ.27 லட்சம் மோசடி
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி: செல்லூர் ராஜூ அதிரடி
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!