ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்!: பாஜகவின் தவறான கொள்கையால் நாடு எண்ணற்ற சவாலை சந்திக்கிறது..சிந்தனை அமர்வு மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு..!!
2022-05-13@ 15:40:15

உதய்பூர்: பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரி அமைப்பின் தவறான கொள்கையால் நாடு எண்ணற்ற சவால்களை சந்தித்து வருகிறது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 'சிந்தனை அமர்வு' என்ற 3 நாள் காங்கிரசின் சிந்தனை அமர்வு மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் நாட்டின் பன்முகத் தன்மைக்கும், ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பவர்கள் விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர். பிரதமர் மோடியும், அவரைச் சார்ந்தவர்களும் அதிகபட்ச ஆளுமை, குறைந்தபட்ச அரசு என்ற கோஷத்தை முன்வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
நாட்டின் அனைத்து தரப்பினரிடையே வெறுப்பு பேச்சுக்களை பாஜக அரசு பரப்பி வருகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களிடையே அச்சத்தை பரப்பி வருகிறது என சாடினார். தொடர்ந்து பேசிய சோனியாகாந்தி, சாமான்ய மக்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தி பிளவுபடுத்த பாஜக அரசு முயற்சி செய்கிறது என்றும் குற்றம்சாட்டினார். மெ 15ம் தேதி மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேரு உரையாற்ற உள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
மேலும் செய்திகள்
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது: வானிலை மையம் தகவல்
விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளியும், தமிழ்நாட்டுக்கு கிள்ளியும் கொடுத்த ஒன்றிய அரசு
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற நிதிஷ் திட்டமா?.. விரிசல் அதிகரித்திருப்பதால் எந்நேரமும் கூட்டணி உடைய வாய்ப்பு
விமானத்தில் இருந்து இறங்கி ஓடுபாதையில் நடந்து சென்ற பயணிகள்; பேருந்து வர தாமதம்
பக்தர்கள் வருகை குறைந்தது அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
`இந்தியாவில் குணமடையுங்கள்’மருத்துவ சுற்றுலா தகவல்தளம் ஆக.15ல் தொடங்க ஒன்றிய அரசு திட்டம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!