SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

2022-05-13@ 12:21:54

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச சான்றிதழ்களை வழங்கி தேசிய அளவிலான பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் விற்பனை விழாவில் முதல் பரிசு பெற்ற தோடர் பழங்குடியின பெண்களை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்இன்று (13.5.2022) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு முதல் தவணைத் தொகையாகத் தலா  இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். திதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான தனி பணிக்குழு நிதியான (CORPUS FUND) ஐம்பது இலட்சம் ரூபாயிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையினைக் கொண்டு ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மதம் மாறிய ஆதிதிராவிட கிறித்துவர்களின் சிறந்த 10 படைப்புகள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாதோர் ஒருவரின் சிறந்த படைப்பையும் சேர்த்து மொத்தம் 11 படைப்புகளைத் தேர்வுசெய்து, அப்படைப்புகளுக்கு ரூ.50,000/-  பரிசுத்தொகையாகவும், பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் 2020-2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்காகத் தேர்வு செய்யப்பட்ட முருகேசன் (சட்டப்பார்வையில் ஆவணங்கள்), கு. வாஞ்சிநாதன் (களம் கண்ட தமிழ்), ஆர். இலங்கேஷ்வரன் (விண்ணைத் துளைக்கும் விழுதுகள்), பி.சிவலிங்கம் (அறிவுலக மேதை அம்பேத்கர்), பானு ஏழுமலை (அம்பேத்கர் தான் ஆற்றிய உரையும் விவாதங்களும்), பிரியாவெல்சி, (ஆத்மம் பழகு அனைத்தும் பழகு),  பொன்மணிதாசன் (பொன்மணிதாசன் கவிதைகள்),  சுப்பிரமணி (சிகரங்களுக்கான விலாசங்கள்), யாக்கன் (டாக்டர் அம்பேத்கர் அரசமைப்புச் சட்ட அவைக்குள் நுழைந்த வரலாறு அதன் பின்னணி அரசியல் சூழ்நிலைகள்), காளியப்பன் (ஆநிரை), முனைவர் ந. வெண்ணிலா (பழந்தமிழர் மானிடவியல்) ஆகியோருக்கும்;  2021-2022ஆம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்காகத் தேர்வு செய்யப்பட்ட எஸ்.கே. அந்தோணிபால் (பறையர்கள் ஆட்சியும் வீழ்ச்சியும்), மனோகரன் (இந்திய நாட்டின் கவுரவம் டாக்டர் அம்பேத்கர்),இர. நாகராஜ் (பைந்தமிழ் பூங்காற்று), திரு.கருவூர் கன்னல் (ஓர் ஊரின் கதை),அன்புதீபன் (அவள் தேடிய சொந்தம்), தங்கசெங்கதிர் (எ) த. செந்தில்குமார் (மானுடத் தெறிப்புகள்), அ.ப.காரல் மார்க்ஸ் சித்தாத்தர் (அம்பேத்கரின் “புத்தரும் அவர் தம்மமும்”), கருப்பசாமி (சித்தர் இலக்கியங்கள் காட்டும் ஆன்மீகமும் மருத்துவமும்), தமிழ்ச்செல்வி (நிழல் பருகும் நீர்), மதிவேந்தன் (சங்கம் - ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்) ஆகியோருக்கும் என மொத்தம் 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு முதலமைச்சர்  முதல் தவணைத் தொகையாகத் தலா  இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்தியாவின் 75 -ஆம் ஆண்டு சுதந்திர அமுத பெரு விழாவை முன்னிட்டு, ஒன்றிய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் சார்பில்  ஒடிசா மாநிலம். புவனேஸ்வரில் 23.4.2022 முதல் 29.4.2022 வரை நடைபெற்ற  9-வது தேசிய அளவிலான பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் விற்பனை விழாவில் (Live Demonstration and Sale of Products) தமிழக பழங்குடியினர் சார்பாக உதகை மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்தின் மூலம் 3 தோடர்  இனத்தைச்  சார்ந்த பழங்குடிப் பெண்கள் தெரிவு செய்யப்பட்டு விற்பனை முகவர்களாக அனுப்பிவைக்கப்பட்டனர்.  அவ்விழாவில் மொத்தம் 62 பழங்குடியினரின் கைவினைப் பொருட்களும் 200 விற்பனை அங்காடிகளும் நிறுவப்பட்டு இருந்தன.  இவ்விழாவில் உதகை மாவட்டத்தில் வாழும் பண்டைய பழங்குடியினரான தோடர் இன மக்களால் வெள்ளை நிற பருத்தி துணியில் கருப்பு மற்றும் சிவப்பு நிற கம்பளி நூல்களை கொண்டு கைகளால் நெய்யப்படும் பூத்தையல் தேசிய அளவில் முதலிடம் பெற்றது. இதற்கான பரிசு தொகையாக ரூ.5000-மும் பழங்குடியினர் ஆய்வு யைமத்திற்கு கேடயமும் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டது.

தேசிய அளவிலான பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் விற்பனை விழாவில், தோடர் பழங்குடியினரின் பூத்தையல் தேசிய அளவில் முதல் பரிசு பெற்றதற்காக, இவ்விழாவில் கலந்து கொண்ட தோடர் பழங்குடியின பெண்களும், பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) உதயகுமார், தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் சோ. மதுமதி,   பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் எஸ். அண்ணாதுரை, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

 • ruto-wins-presidency

  கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

 • ragul-inde-15

  டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

 • independence-15

  75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்