கரும்பு விவசாயிகள் உபபொருட்களை கொண்டு இணைமின், எத்தனால் உற்பத்தி ஏற்படுத்தி ஆலையை லாபகரமாக இயக்க வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுரை
2022-05-13@ 00:36:22

சென்னை: கரும்பு விவசாயிகள் உபபொருட்களை கொண்டு இணைமின் உற்பத்தி, எத்தனால் உற்பத்தி ஏற்படுத்தி ஆலையை லாபகரமாக இயக்க வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் - கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், கோயம்புத்தூர் மற்றும் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைந்து நடத்தும் 52ம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான கரும்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பயிலரங்கை வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சென்னை, ஆழ்வார்பேட்டையில் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையால் அமைக்கப்பட்ட கரும்பு ரகங்கள், இயந்திரங்கள் மற்றும் நுண்ணுயிர் பாசன அமைப்புகள், திசு வளர்ப்பு நாற்றுகள், உயிர் உரங்கள் உள்ளடக்கிய கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும், பயிலரங்க ஆய்வு கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு, அதிக சராசரி மகசூல் பெற்ற விவசாயிகள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘நானும் ஒரு கரும்பு விவசாயிதான். உயர் விளைச்சல் மற்றும் உயர் சர்க்கரை சத்து, கரும்பு ரகங்கள் சாகுபடியை கரும்பு விவசாயிகள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டும். உபபொருட்களை கொண்டு இணைமின் உற்பத்தி, எத்தனால் உற்பத்தி ஏற்படுத்தி ஆலையை லாபகரமாக இயக்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் சுந்தர், வரலட்சுமி மதுசூதனன், சர்க்கரை துறை ஆணையர் ஹர்மந்தர் சிங், சர்க்கரை துறை கூடுதல் ஆணையர் அன்பழகன், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம்-கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்கு நிறுவன இயக்குனர் ஹேமபிரபா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் சுப்பிரமணியம், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் ஜவகர் பிரசாத் ராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
பூக்கடை பகுதியில் 2 ஆண்டாக வாடகை தராத 130 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்: இபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கினர்
புதுக்கோட்டையில் இந்த ஆண்டு 50 இடங்களுடன் பல் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
50 சதவீத இடங்களுக்கான கட்டண விவகாரம் தனியார் மருத்துவ கல்லூரிகள் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!