சாமி சிலைகள் இருப்பதாக சர்ச்சை தாஜ்மகாலில் சோதனையிடக் கூடாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு
2022-05-13@ 00:01:44

லக்னோ: முகலாய அரசர் ஷாஜஹான் தனது மனைவி நுார்ஜஹான் நினைவாக கட்டியது தாஜ்மகால். ஆக்ராவில் அமைந்துள்ள இதைக் கட்ட அங்கிருந்த தேஜோலாயா எனும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாக பாஜ பிரச்னையை எழுப்பி வருகிறது. இக்கோயிலில் இருந்த சிலைகள், தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதை திறந்து பார்க்க உத்தரவிடக் கோரி, பாஜ செய்தி தொடர்பாளர் ரஜ்னீஷ் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த தகவலை கேட்க நீங்கள் யார்? உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இது போன்ற விவாதங்கள் வரவேற்பு அறைகளில்தான் நடக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்தில் அல்ல. எனவே, அறைகளை திறந்து சோதனையிட உத்தரவிட முடியாது,’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
Tags:
Sami Statues Controversy Taj Mahal Allahabad High Court சாமி சிலைகள் சர்ச்சை தாஜ்மகால் அலகாபாத் உயர் நீதிமன்றம்மேலும் செய்திகள்
எந்த தடையும் மக்களை கட்டுப்படுத்தாது பாகிஸ்தானை சீரமைக்க பெரிய அறுவை சிகிச்சை தேவை: இம்ரான் கான் ஆவேசம்
பான் மசாலா,சிகரெட்கள் மீது அதிகபட்ச செஸ் வரி நிர்ணயம்
பாஜவுக்கு எதிரான போராட்டத்தில் பிராந்திய கட்சிகளை ஆதரிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்
மேற்கு வங்க அமைச்சர் பேச்சு மம்தா பானர்ஜி கடவுள் போன்றவர்
தலைமறைவாக திரியும் அம்ரித் பாலுக்கு அடைக்கலம் கொடுத்த பெண் கைது
குஜராத்தில் அடுத்த மாதம் நடக்கிறது ஆயிரம் ஆண்டு உறவை மீட்க சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம்: பிரதமர் மோடி பெருமிதம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி