முதுநிலை நீட் தேர்வை 8 முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தல்.!
2022-05-12@ 12:27:22

டெல்லி: முதுநிலை நீட் தேர்வை 8 முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதியும், முதுகலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 21ம் தேதியும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தோ்வு தாமதமாகவே நடைபெற்றது. கடந்த ஆண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்னும் நிறைவடையாத நிலையில் நடப்பாண்டுக்கான தோ்வை நடத்துவது முறையாக இருக்காது என்பதால் பல்வேறு தரப்பினர் முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) புதன்கிழமை ஒன்றிய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. முதுநிலை நீட் தேர்வை 8 முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை இந்திய மருத்துவ சங்கம் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. இதனிடையே நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி எம்பிபிஎஸ் மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு 13ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மேலும் செய்திகள்
இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் 7 மாதத்தில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: தலைமை தேர்தல் அதிகாரிகள் தகவல்
சென்னை நீர் நிலைகள் தொடர்பான வழக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
நில மோசடி வழக்கில் ஆக. 22 வரை சஞ்சய் ராவத் சிறையிலடைப்பு: மும்பை நீதிமன்றம் உத்தரவு
மின்சார சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பிவைப்பு
நிலக்கரி முறைகேடு வழக்கு.: முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் எச்.சி.குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு
உடல் முழுவதும் கொப்பளங்கள்!: ராஜஸ்தான், குஜராத்தில் கொத்து கொத்தாக மரணிக்கும் பசு மாடுகள்..3,000 கால்நடைகள் உயிரிழப்பு..!!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!