மணல் திட்டாக மாறிய சோலையார் அணை
2022-05-12@ 11:36:48

வால்பாறை: வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக மே இறுதி வாரத்தில் துவங்கும் மழை தற்போது மே2ம் வாரம் தொடங்கி உள்ளது. வானம் தொடர்ந்து கரு மேகங்களுடன் காட்சி அளித்து வருகிறது. குளிர் காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட அணைகளில் நீர் பிடிப்பில் முக்கியமான அணையாக கருதப்படும் சோலையார் அணை நீர் மட்டம் குறைந்து மண்திட்டாக காட்சி அளிக்கிறது. மேலும் கீழ் நீரார், மேல்நீரார் அணைகளும் நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது. விரைவில் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று சாரல் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்தது. தொடர்ந்து தென்மேற்கு பருவ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் தொடர்கிறது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்து உள்ளன. இந்நிலையில் வால்பாறையில் கேரளாவில் வானிலை நீடிக்கும் என்பதால், தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வறண்ட அணைகள் விரைவில் நிரம்பும் என பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனா். மொத்தம் 165 அடி கொள்ளளவு கொண்ட சோலையார் அணையின் நீர் மட்டம் 26.6 அடி மட்டுமே உள்ளது. எனவே அணை பகுதி மண்திட்டாக காட்சி அளிக்கிறது.
மேலும் செய்திகள்
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
மதுரை மாவட்ட பாஜக தலைவர் பதவியில் இருந்து சரவணன் நீக்கப்பட்டதாக அண்ணாமலை அறிவிப்பு
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!