மயிலாப்பூர் தம்பதி கொலையில் துரிதமாக குற்றவாளிகள் கைது சென்னை மாநகர காவல்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
2022-05-12@ 00:01:20

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை மாநகர காவல்துறை துரிதமாக செயல்பட்டு 6 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளிகளை கைது செய்ததற்காக, அவர்களது பணியை பாராட்டி வாழ்த்தினார். சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா ஆகியோர் கடந்த 7ம் தேதி கொல்லப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அந்த வீட்டில் ஓட்டுநராக பணியாற்றி வந்த நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் டார்ஜிலிங்கை சேர்ந்த அவரது கூட்டாளி ரவிராய் ஆகியோர் சென்னை மாநகர காவல் துறையினரால் ஆந்திர காவல்துறையினர் உதவியுடன் ஓங்கோலில் கைது செய்யப்பட்டனர். இருவரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டு அவர்கள் கொலை செய்து புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். மேலும் குற்றவாளிகளிடமிருந்து 1127 சவரன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்திகள், வெள்ளி நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இக்கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்த மயிலாப்பூர் மாவட்ட காவல் துணை ஆணையர் திஷா மிட்டல், காவல் உதவி ஆணையர்கள் குமரகுருபரன் மற்றும் கவுதமன், காவல் ஆய்வாளர் ரவி, உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணன், மாரியப்பன், அன்பழகன், காவலர் நிலை-1 சங்கர் தினேஷ், காவலர் கதிரவன் ஆகியோரை முதலமைச்சர் பாராட்டி, வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், காவல் இணை ஆணையர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:
Mylapore couple murder criminals arrest Chennai Metropolitan Police Chief Minister MK Stalin's greeting மயிலாப்பூர் தம்பதி கொலை குற்றவாளிகள் கைது சென்னை மாநகர காவல்துறை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துமேலும் செய்திகள்
கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக புதிதாக 10 இடங்களில் தானியங்கி மழை அளவீடு: இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டம்
சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.700 கிலோ கிராம் நகைகள் மீட்பு: காவல்துறை தகவல்...
சென்னை மாநகராட்சியில் வார்டு அளவிலான நீர் மேலாண்மையை ஆய்வு செய்ய திட்டம்: இதுவரை 10,000 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு
சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் 2 நாட்கள் பிரமாண்ட கலை நிகழ்ச்சி...
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...