உளுந்தூர்பேட்டை அருகே வடமாநில இளைஞர் கொலை: சடலத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை
2022-05-11@ 17:32:33

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில், சடலத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பூ.மாம்பாக்கம் கிராம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்ற விவசாயி கடந்த சில மாதங்களாக கிராமத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். புது வீடு கட்டும் பணியில் டைல்ஸ் உள்ளிட்ட சில கட்டுமான பணிகளுக்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பவுன்ராஜ் மற்றும் அவருடன் 2 தொழிலாளிகள் சேர்ந்து வேலை செய்து வந்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கட்டுமான வேலை செய்ததற்கான கூலியை வீட்டின் உரிமையாளரிடம் பெற்ற பவுன்ராஜ் மற்றும் 2 பணியாளர்கள் கட்டுமான இடத்தில் தாங்கிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பீகார் மாநில தொழிலாளி ஊருக்குச் செல்வதாக கூறி புறப்பட்டார். இதனை தொடர்ந்து, பவுன்ராஜை காணவில்லை என அவரது உறவினரான லிங்கேஸ்வரராவ், இன்று காலை கட்டுமான பணி நடக்கும் வீடான பூ.மாம்பாக்கம் கிராமத்திற்கு தேடி வந்துள்ளார். அப்பொழுது, வீட்டின் ஒரு பகுதியில் ரத்தக்கறை படிந்த துணிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், அப்பகுதியின் அருகில் சென்று சுற்றி பார்த்தபோது, அதிகப்படியான ரத்தம் கொப்பளித்து வந்துகொண்டிருக்கும் இடத்தை கண்டுபிடித்தார். இதுகுறித்து உடனடியாக வீட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற டிஎஸ்பி மகேஷ், இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் சடலம் புதைக்கப்பட்ட மண்மேடான பகுதியை தோண்டினர். அப்போது, பவுன்ராஜின் சடலம் கழுத்து அறுக்கப்பட்டு, ரத்தவெள்ளத்தில் கிடந்தது.
இதனையடுத்து சடலத்தை மீட்ட போலீசார் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இவர் எதற்காக கொலைசெய்யப்பட்டார்? என்ன காரணம்? என்பது குறித்து விசாரித்து வரும் நிலையில், தலைமறைவான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு கூலித்தொழிலாளியை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திண்டுக்கல் அருகே புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
தோவாளை-தாழக்குடி சாலை; ரூ.3.28 கோடியில் சீரமைப்பு: ரூ.3.87 கோடியில் ஆற்றின்குறுக்கே பாலமும் அமைக்கமுடிவு
மேட்டூர் அணைக்கு 19,000 கனஅடி நீர்வரத்து
வேலூரில் பொதுமக்கள் வேதன; ரூ.32.52 கோடியில் கட்டிய விமான நிலையம் பயன்பாட்டிற்கே வராமல் பாழாகும் அவலம்: முட்புதர்கள் சூழ்ந்து காடு போல் மாறியது
கேரளாவில் 31ம் தேதி ஓணம் பண்டிகை; தோவாளையில் அறுவடைக்கு தயாரான பூக்கள்: ஆர்டர்களும் குவிந்து வருகிறது
பழநி மலைக்கோயில் ரோப்காரில் புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...