திருவள்ளூர் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்திட வேண்டும்: பேரவையில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ கோரிக்கை
2022-05-11@ 00:00:55

சென்னை: திருவள்ளூர் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்திட வேண்டும் என்று திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கோரிக்கை வைத்தார். தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திருவள்ளூர் தொகுதி வி.ஜி.ராஜேந்திரன் (திமுக) பேசியதாவது: திருவள்ளூர் தொகுதி, கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி மணவாளநகர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் மற்றும் சின்னம்மாபேட்டையில் புறக்காவல் நிலையம் மற்றும் பூண்டி ஊராட்சியில் புறக்காவல் நிலையம் அமைத்திட வேண்டும். திருவள்ளூர் தொகுதி, திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமிவிலாசபுரம் ஊராட்சியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து பாலம் அமைத்திட வேண்டும். பூண்டி ஒன்றியம், ராமஞ்சேரி - ஈன்றபேட்டை இடையே நகரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்திட வேண்டும். விடையூர் கலியனூர் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்திட வேண்டும்.
திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான அனைத்து பூங்காக்களையும் அரசு சிறப்பு திட்டம் மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூர் நகரில் காய்கறி, மீன் மற்றும் இறைச்சி விற்பனை அங்காடிகள் நகராட்சி சார்பில் அமைத்திட வேண்டும். திருவள்ளூர் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்திடும் வகையில் நகரத்தின் அருகில் உள்ள வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், ஏகாட்டூர், திருப்பாச்சூர், புல்லரம்பாக்கம், தலக்காஞ்சேரி, காக்களூர், சேலை ஆகிய ஊராட்சி பகுதிகளை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைத்திட வேண்டும்.
திருவள்ளூர் நகராட்சி, வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகளை நிறைவேறிறயதால் சாலைகள் சேதமடைந்துள்ளது. அங்கு புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுபட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை நிறைவேற்றிட வேண்டும். திருவள்ளூர் தொகுதியில், திருவள்ளூர் நகரில் உள்ள உழவர் சந்தையை மேம்படுத்தி மாதிரி சிறப்பங்காடியாக அமைத்திட வேண்டும். கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம், கடம்பத்தூா், கனகம்மாசத்திரம், திருவாலங்காட்டில் உழவர் சந்தை அமைத்து தர வேண்டும். திருவள்ளூர் நகரில் பெரும்பாக்கம், புங்கத்தூர், வள்ளுவர்புரம், எம்ஜிஆர் நகர், வரதராஜநகர் பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
* எம்ஜிஆர் பாடலை பாடினார்
தனது பேச்சின் இடையே எம்ஜிஆர் பாடலான, `அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா..’ என்பதை ராகத்துடன் பாடினார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் சிலர், அது தங்களது கட்சி தலைவர் எம்ஜிஆர் பாடியது என்பதை நினைவுபடுத்தினர். அதற்கு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், `பாடலை பாடியது வேண்டுமானால் உங்கள் தலைவராக இருக்கலாம். அதன்படி ஆட்சியை செய்பவர் எங்கள் முதல்வர்’ என்று பதிலளித்தார். இறுதியாக தனது பேச்சை அவர் முடிக்கும்போதும், `ஒரு தவறு செய்தால்.. அதை தெரிந்து செய்தால்.. அது தேவன் என்றாலும் விடமாட்டேன்’ என்று மீண்டும் எம்ஜிஆர் பாடலை பாடி நிறைவு செய்தார்.
Tags:
Tiruvallur Municipality Special Level Municipality Grade VG Rajendran MLA in the Assembly திருவள்ளூர் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சி தரம் பேரவையில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏமேலும் செய்திகள்
தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன?: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை
நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார்; போதைப் பொருள் ஒழிப்பு பிரசாரம்: கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுக்கின்றனர்
சிகிச்சைக்காக 976 நாட்கள் விடுமுறை எடுத்த தலைமை காவலருக்கு மீண்டும் பணி
கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
ஏபிஆர்ஓ பணிக்கான நேரடி நியமனம் ரத்து; டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: அரசு அதிரடி உத்தரவு
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!