வெளிநாட்டு நன்கொடை முறைகேடு சென்னை, கோவை உட்பட 40 இடங்களில் சிபிஐ ரெய்டு: ஒன்றிய உள்துறை அதிகாரிகளும் உடந்தை
2022-05-11@ 00:00:42

புதுடெல்லி: வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சென்னை, கோவை உட்பட நாடு முழுவதும் 40 இடங்களில் சிபிஐ நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தியது. இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுகின்றன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. ‘வௌிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் - 2010’ன் கீழ், இந்த முறைகேடுகளை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நன்கொடையை பெறுவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், இடைத்தரகர்கள் இணைந்து கூட்டாக செயல்படுவதாக சிபிஐக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதன் அடிப்படையில், சந்தேகத்துக்குரிய அதிகாரிகளின் செயல்பாடுகள், இடைத்தரகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளை நாடு முழுவதும் சிபிஐ கண்காணித்து வந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். டெல்லி, சென்னை, கோவை, ஐதராபாத், மைசூர் உட்பட பல்வேறு நகரங்களில் சோதனை நடைபெற்றது. இதில், முறைகேடுகளுக்கு துணை போன ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள், இடைத்தரகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் 6 பேர் சிக்கியுள்ளனர். மேலும், ஹவாலா மோசடியில் தொடர்புள்ள ரூ.2 கோடியும் சிக்கியது. சோதனை தொடர்ந்து நடக்கிறது. இதில், மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Foreign Donation Abuse Chennai Coimbatore CBI Raid Union Home Officer வெளிநாட்டு நன்கொடை முறைகேடு சென்னை கோவை சிபிஐ ரெய்டு ஒன்றிய உள்துறை அதிகாரிமேலும் செய்திகள்
விவசாயிக்கு இலவச மின்சாரம் ரத்தானால் ஆழாக்கு கூட மிஞ்சாது: கடும் உணவு தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா
சுகாதார திட்டங்களுக்கான ஒன்றிய அரசு தரும் நிதியை விரைவாக பெற வேண்டும்: மாநிலங்களுக்கு அறிவுரை
தெலங்கானாவில் வாகனம், ரயில்கள் நிறுத்தம் இருந்த இடத்தில் 1 நிமிடம் தேசிய கீதம் பாடிய மக்கள்: சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு
கூட்டு பலாத்காரம், 7 பேர் படுகொலை பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலை: பொதுமன்னிப்பு என்ற பெயரில் குஜராத் அரசு சர்ச்சை உத்தரவு
ஆந்திராவில் உள்ள 10 தங்க சுரங்கங்களை மீண்டும் திறக்க ஏலம்
இலவசம்னு சொல்றதை நிறுத்துங்கள்: கெஜ்ரிவால் ஆவேசம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!