பராமரிப்பின்றி உள்ள வரதமாநதி அணையை சீரமைக்க கோரிக்கை
2022-05-10@ 18:46:13

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கொடைக்கானல் சாலையில் வரதமாநதி அணை உள்ளது. 67 அடி உயரமுள்ள வரதமாநதி அணையில் 51.97 அடிக்கு நீர் உள்ளது. கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளும், பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதிகளவு இந்த அணைக்கு சென்று நேரத்தை செலவிடுவது வழக்கம். ஆனால், இந்த அணை கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது.
நீரூற்று மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடைக்கின்றன. அணையின் பூங்கா குப்பைகள் குவிந்த நிலையில், புதர் மண்டிக் கிடக்கிறது. தவிர, குடிமகன்களின் சேட்டை காரணமாக அணையின் பல பகுதிகளில் மதுபாட்டில்கள் சிதறிக் கிடக்கின்றன. இதனால் வரதமாநதி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் உள்ள பூங்காவை ஒழுங்குபடுத்தி, சேதமடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து, கண்ணைக் கவரும் வகையில் புனரமைக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
மதுரை மாவட்ட பாஜக தலைவர் பதவியில் இருந்து சரவணன் நீக்கப்பட்டதாக அண்ணாமலை அறிவிப்பு
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!