சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வங்கி கடன் பெற வசதியாக முத்திரை தீர்வை கட்டணத்தில் இருந்து விலக்கு: தமிழக அரசு உத்தரவு
2022-05-10@ 00:00:19

சென்னை: சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்காக ஆவணங்களை பதிவு செய்ய முத்திரை தீர்வை கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து பத்திரப்பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார். தற்சார்பு இந்தியா திட்டத்தில், (ஆத்ம நிர்பார் பாரத்) வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்த சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதற்காக, சார்பதிவாளர் அலுவலகங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கொரோனா கால கட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் கடன்கள் பெற முத்திரை தீர்வ கட்டணம் வசூலிப்பதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதையேற்று கடன் பெறுவதற்கான ஆவணங்களை பதிவு செய்வதற்கான முத்திரை தீர்வை கட்டணம் வசூலிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டன. அதே போன்று பதிவு கட்டண்ம 1 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைத்து கடந்த 2020 நவம்பரில் தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து ஓராண்டிற்கு இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்ன.
இந்த நிலையில், 2022-2023ம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரில், தற்சார்பு இந்தியா திட்டத்தில் 130க்கும் மேற்பட்ட சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் நோக்கில் 2023 மார்ச் மாதத்திற்குள் ரூ.50 ஆயிரம் கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நலன் கருதி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான ஒப்பந்ததை பதிவு செய்வதற்கான முத்திரை தீர்வை விலக்கு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தொழில்துறை ஆணையர் பரிந்துரையின் பேரில், பத்திரப்பதிவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து, முத்திரை தீர்வை கட்டணத்துக்கு டிசம்பர் 31ம் தேதி வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Small and Medium Enterprises Bank Credit Government of Tamil Nadu சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் வங்கி கடன் தமிழக அரசுமேலும் செய்திகள்
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது!: எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்த டிடிவி தினகரன்..!!
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு சைக்ளிங் லீக் ஆக.27ல் தொடக்கம்
சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் செப். 12ம் தேதி தொடங்குகிறது
அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை: மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி
அமமுகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்: சசிகலா ஆதரவாளர்கள் குழப்பம்..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!