புளியந்தாங்கல் முத்தாலம்மன் கோயில் திருவிழா அந்தரத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவிப்பு
2022-05-09@ 20:45:38

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் புளியந்தாங்கல் கிராமம், ஏரிக்கோடியில் ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் திருவிழா நேற்று நடந்தது. தேரில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு கூழ்வார்த்தனர். அப்போது காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தியும் அந்தரத்தில் பறந்து வந்தும் அம்மனுக்கு மாலை அணிவித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவையொட்டி நேற்றிரவு முத்தாலம்மன் திருவீதி உலாவும், நாடகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஊர் நாட்டாண்மைதாரர் கோவிந்தசாமி, நிர்வாகிகள் பாபு, ரவி, நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், வார்டு கவுன்சிலர்கள் செல்வம், சுமதி, ஐயப்பன், ரம்யா எத்திராஜ், சிவா, வாலாஜா ஒன்றிய குழு உறுப்பினர் புவனேஸ்வரி பாண்டியன், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சரஸ்வதி மோகன் மற்றும் ஏரிக்கோடி விழாக் குழுவினர்கள், கிராம மக்கள். இளைஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் திருவிழா; பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
மருத்துவான்பாடி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல்; கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை
வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் வெண்கலை சிலை; கிராம சபையில் தீர்மானம்
குடிபோதை தகராறில் விபரீதம்; மாமாவை கம்பியால் அடித்து கொன்ற மைத்துனர் கைது
கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம், மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து தெலுங்கு குறும்பட தயாரிப்பாளர் பலி; குடும்பத்தினர் 5 பேர் படுகாயம்
மாற்று இடம் வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர்; அலுவலகத்தை நரிக்குறவர்கள் திடீர் முற்றுகை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!