கடை வாடகையை குறைக்க வேண்டும்: சட்டசபையில் விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர்ராஜா வலியுறுத்தல்
2022-05-09@ 15:43:03

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா பேசியதாவது:நாட்டுக்கு வணிகம் முக்கியம். ஒரு கிராமம் நகரமாகிறது, நகரம் மாநகரமாகிறது, இப்படி நகர வளர்ச்சிக்கு வணிகர்களுடைய பங்கு மிக முக்கியமானது. வணிகர்களை ‘ நான்-கவர்மெண்ட் ஸ்டாப்’ என்று கூட சொல்லலாம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களாக பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று சேவை செய்தவர்கள் வணிக பெருமக்கள்.
கடந்த காலங்களில் நகராட்சி நிர்வாகம், இந்துசமய அறநிலையத்துறை, வீட்டு வசதித்துறைகளுக்கு சொந்தமான இடங்களில் செயல்படும் கடைகளுக்கு அதிக அளவில் வாடகை உயர்த்தப்பட்டு வசூல் செய்யப்பட்டது. தாயுள்ளம் கொண்ட தமிழக முதலமைச்சர், திமுக அரசு வணிகர்களின் குரலை என்றும் மதித்து போற்றி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் நண்பன் என்று தெரிவித்தார். முதல்வர், அந்த கடைகளுக்கு உயர்த்தப்பட்ட வாடகையை குறைத்து வணிகர்கள் பயன்பெறும் வகையில் உதவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகள்
சின்சினாட்டி ஓபன் முதல் சுற்றிலேயே வெளியேறிய வில்லியம்ஸ் சகோதரிகள்
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு அரசியல் கட்சிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை
சாதி அடிப்படையில் பழிவாங்குவதாக புகார் தேசிய பேஷன் டெக்னாலஜி இயக்குனர் மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியை தேர்வு செய்தது செல்லாது: ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்
அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.11 லட்சம் அபராதம்: போக்குவரத்து துறை நடவடிக்கை
மின்சார துறையில் முதற்கட்ட பணிகளை ரூ.2038 கோடியில் முடிக்க திட்டம்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!