பலியான மாணவி சாப்பிட்ட சிக்கன் ஷவர்மாவில் புதிய ரக பாக்டீரியா: கேரள அமைச்சர் தகவல்
2022-05-09@ 00:53:52

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், காசர்கோடு அருகே செறுவத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவநந்தா என்ற பிளஸ் 1 மாணவி பேக்கரியில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் இறந்தார். இதே பேக்கரியில் ஷவர்மா சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கேரளா முழுவதும் ஓட்டல்கள், பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அசுத்தமான முறையில் உணவு தயாரித்த 100க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், பேக்கரிகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இதற்கிடையே, பலியான மாணவி சாப்பிட்ட பேக்கரியில் இருந்து சிக்கன் ஷவர்மா, உணவுப் பொருட்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதில், ஷவர்மாவில் வாந்தி, மயக்கம் வயிற்றுப்போக்கு உள்பட நோய்களை ஏற்படுத்தும் ஷிகெல்லா பாக்டீரியா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், ஷவர்மாவில் ‘சால்மொனெல்லா’ என்ற ஒரு புதிய வகை பாக்டீரியா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், ‘‘காசர்கோட்டில் பலியான மாணவி சாப்பிட்ட பேக்கரியிலிருந்து ஷவர்மா, மிளகுப் பொடி உள்பட பொருட்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதில் ஷவர்மாவில் ஷிகெல்லா பாக்டீரியாவும், மிளகுப் பொடியில் சால்மொனெல்லா என்ற பாக்டீரியாவும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் ஓட்டல்கள், பேக்கரிகளில் மோசமான உணவு விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்து உள்ளன. இதனால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர நடத்தி வருகின்றனர்,’’ என்றார்.
* ‘சால்மொனெல்லா’ பாக்டீரியா உடலில் பரவினால் கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தும்.
* டைபாய்டு காய்ச்சல் வருவதற்கும் இந்த பாக்டீரியாதான் ஒரு வகையில் காரணமாகும்.
* உடனடியாக கவனிக்காவிட்டால் இந்த பாக்டீரியா உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
Tags:
Killed student chicken shawarma new type of bacteria Kerala Minister பலி மாணவி சிக்கன் ஷவர்மா புதிய ரக பாக்டீரியா கேரள அமைச்சர்மேலும் செய்திகள்
இளம்பெண்ணை தாக்கிய விவகாரம், பாஜ நிர்வாகியின் வீடு இடிப்பு; உபியில் அதிரடி நடவடிக்கை
வெங்கையா நாயுடு பதவிக்காலத்தில் மாநிலங்களவை செயல்பாடு புதிய உச்சத்தை தொட்டது; பிரதமர் மோடி பாராட்டு
மபி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 14 கார்கள் அடித்து செல்லப்பட்டன; 50 பேர் உயிர் தப்பினர்
ஷிண்டே அமைச்சரவை இன்று விரிவாக்கம்
சிவசேனா எம்பிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்; மும்பை நீதிமன்றம் உத்தரவு
கேரள அரசு, ஆளுநர் மோதல்; 11 சட்ட மசோதாக்களில் கையெழுத்திட மறுப்பு
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!