ரகசிய வாக்கெடுப்பில் 1,416 ஓட்டுகள் பெற்று ஹாங்காங் புதிய தலைமை நிர்வாகியாக ஜான் லீ தேர்வு
2022-05-09@ 00:52:09

ஹாங்காங்: ஹாங்காங்கில் புதிய தலைமை நிர்வாகி தேர்வுக்கு நடந்த ரகசிய வாக்கெடுப்பில் 1,416 ஓட்டுகள் பெற்று முன்னாள் பாதுகாப்பு அதிகாரியான ஜான் லீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட ஹாங்காங் 1997ம் ஆண்டு சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர், சீனாவுக்கு விசுவாசமாக இருப்பவரே மறைமுகமாக ஹாங்காங் தலைமை நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். இதன் புதிய நிர்வாகியை தேர்வு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நேற்று நடந்தது. இதில், சீனாவால் நிறுத்தப்பட்ட ஜான் லீ வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 1,500 பிரதிநிதிகள் வாக்குகளில், வெற்றி பெறுவதற்கு 751 வாக்குகளே போதுமானது. ஆனால், 1,416 வாக்குகளை பெற்று ஜான் லீ வெற்றி பெற்றார். இவர் ஜூலை 1ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
Tags:
In a secret ballot 1 416 votes were cast in favor of Hong Kong's new chief executive John Lee ரகசிய வாக்கெடுப்பில் 1 416 ஓட்டுகள் ஹாங்காங் புதிய தலைமை நிர்வாகி ஜான் லீ தேர்வுமேலும் செய்திகள்
இந்திய நாட்டின் 75வது சுதந்திர நிறைவு தினத்தையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து..!!
எகிப்து சர்ச்சில் தீ விபத்து 41 பேர் பலி
தைரியம் என்றால் இப்படி இருக்கணும், ஜெய்சங்கரின் வீடியோவை மக்களுக்கு காட்டிய இம்ரான்; பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தானுடன் போர் பயிற்சியா? இலங்கை அரசு மறுப்பு
அமெரிக்க எம்பி.க்கள் தைவானில் பயணம்; சீனா கடும் எதிர்ப்பு
பைடன் அதிர்ச்சி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!