சென்னையில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் முன்பதிவு விவர அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு
2022-05-09@ 00:33:28

சென்னை: சென்னை மாநகராட்சியில் 63 சமுதாய கூடங்களும், 2 கலையரங்கங்களும் பொதுமக்களின் குடும்ப சுபநிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக நாள் வாடகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. சமுதாயக்கூடம் முன்பதிவு செய்வதற்கு நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 6 மாதத்திற்கு முன்பும், கலையரங்கம் முன்பதிவு செய்வதற்கு 3 மாதத்திற்கு முன்பும் முன்பதிவு செய்யவேண்டும். இதற்கான கட்டணம், சரக்கு மற்றும் சேவை வரி, முன்வைப்பு தொகை யை ஏதேனும் ஒரு வங்கியிலிருந்து ‘Revenue Officer, Corporation of Chennai’ என்ற பெயரில் வரைவோலை செலுத்த வேண்டும். அனைத்து சமுதாயக் கூடங்கள், கலையரங்கங்கள் முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பம் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
சமுதாயக் கூடங்கள்/ கலையரங்கங்கள் காலியாக உள்ளதா மற்றும் கட்டண விவரங்களை பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் உள்ள முன்பதிவு செய்யும் பிரிவு அல்லது chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில், சமுதாய கூடங்களில் முன்பதிவானது வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற அனைத்து சமுதாயக் கூடத்திலும் முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள், கட்டண விவரம் மற்றும் புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை பொதுமக்கள் அறியும் வகையில், ஒரு வாரத்தில் வைக்க அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Tags:
Chennai Community Welfare Booking Details Corporation Commissioner சென்னை சமுதாய நலக்கூட முன்பதிவு விவர மாநகராட்சி ஆணையர்மேலும் செய்திகள்
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது!: எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்த டிடிவி தினகரன்..!!
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு சைக்ளிங் லீக் ஆக.27ல் தொடக்கம்
சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் செப். 12ம் தேதி தொடங்குகிறது
அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை: மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி
அமமுகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்: சசிகலா ஆதரவாளர்கள் குழப்பம்..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!