தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயிலில் தேரோட்டம்
2022-05-07@ 18:01:04

நெல்லை: தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயிலில் சித்திரை பெருந்திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. நெல்லை தச்சநல்லூரில் உள்ள பாரம்பரியமிக்க நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது.
விழாவின் சிகரமான வருடாபிஷேகம் மற்றும் தேரோட்டம் இன்று மே 7ம் தேதி நடந்தது. காலை 10.40 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்தல் நடந்தது. கொளுத்திய வெயிலை பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக காலை 7 மணிக்கு மேல் வருடாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினரும், ஸ்ரீ உலகம்மன் பக்த சேவா குழுவினரும் ெசய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயிலில் ஆடித் தேரோட்டம்
இன்டர்நெட் மூலம் தோழிகளை விலை பேசிய கல்லூரி மாணவி
ஓட்டேரியில் கலைஞர் நினைவு தின பொதுக்கூட்டம்; கொள்கை ரீதியாக பிரதமரை எதிர்க்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா 22ல் துவக்கம்: 31ம் தேதி தீர்த்தவாரி உற்சவம்
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் 2 விசைப்படகுகள் கவிழ்ந்தது: 10 மீனவர்கள் தப்பினர்
ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய சென்னை போலீஸ்காரர் பலி
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...