மூன்றடைப்பு அருகே 3 மாத பெண் குழந்தை உடல் தோண்டி எடுப்பு
2022-05-07@ 14:16:35

நாங்குநேரி: மூன்றடைப்பு அருகே உள்ள வடக்கு பத்தினிப்பாறையை சேர்ந்தவர் பூந்துரை (45), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (40). இவர்களது 3 மாத பெண் குழந்தை சக்தி பிரியாவுக்கு கடந்த 2ம் தேதி இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பால் அருந்தாமல் அழுது கொண்டே இருந்த குழந்தை, நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக பெற்றோர் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து மறுநாள் முறைப்படி குழந்தையின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் பெண் சிசு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட குழந்தை நல அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நாங்குநேரி தாசில்தார் இசக்கிப்பாண்டி தலைமையில் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் தோட்டாக்குடி கிராம நிர்வாக அலுவலர் மதுபாலா அளித்த புகாரின் பேரில் மூன்றடைப்பு இன்ஸ்பெக்டர் காளியப்பன் வழக்குப் பதிவு செய்தார்.
இதனிடையே நேற்று தாசில்தார் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குழந்தையின் இறப்புக்கான காரணம் தெரிய வருமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கோவை நகைக்கடையில் ரூ.55 லட்சம் நகை மோசடி ‘ஆன்லைன் ரம்மி’யில் இழந்த சூபர்வைசரிடம் விசாரணை
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைப்படி பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
கி.மு. 300 முதல் 10-ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில் உருவானது கீழடி நகரம்; மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தகவல்
கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’
பலகோடி மோசடி செய்த உரிமையாளர்கள் தலைமறைவு; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை காட்பாடி அருகே சோகம்
1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!