SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள் , பிற பணியாளர்களுக்கு உதவி தொகைமற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

2022-05-07@ 13:03:06

சென்னை: அறம் போற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் முத்தான ஓராண்டு சாதனை வரலாற்றில் பல ஆண்டுகள் கடந்து பேசும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக கொரோனா தொற்று காலத்தில் திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள். பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கும் வகையில் உதவி தொகை ரூ.4,000 /-, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் தொடங்கப்பட்டு 46 திருக்கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை நடைபெற்று வருகிறது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் கலைஞர் தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அன்னைத் தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 14 இறைவன் போற்றி பாடல் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது.  

சரித்திரம் போற்றும் சமத்துவ திட்டம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட 24 அர்ச்சகார்களுக்கும்,பட்டாச்சாரியர்கள், ஒதுவார்கள். பூசாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு திருக்கோயில்கள் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 172 நபர்களுக்கும். கருணை அடிப்படையில் 12 நபர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் வளமாக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் - 1184 ஏக்கரும், 467 மனைகள், 47.0813 சதுரடி கட்டிடங்கள், 36 கிரவுண்ட் 1867 சதுர அடி திருக்குளக்கரையும் அறநிலையத் துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் திருக்கோயில் வசம் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2566  கோடி ஆகும். காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான பூந்தமல்லி நெடுஞ்சாலை. கீழ்ப்பாக்கம், அமைந்துள்ள 32 கிரவுண்டு நிலம் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இவ்விடத்தில் செயல்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் ஹவுஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தை திருக்கோயிலே ஏற்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டு காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு திருக்கோயில் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 'கோரிக்கைகளை பதிவிடுக' எனும் இணைய வழி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய இலவச அழைப்பு மையம் பொது மக்களின் குறைகள் தொலைபேசி மூலம் பெறப்பட்டு அவர்களுக்கு உடனடியாக பதில்கள் வழங்கும் திட்டத்தை 'அழைப்பு மையம்' (Call Center) துவக்கப்பட்டது. திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் செய்வதற்கு இணையவழி முறையில் பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களைத் தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 100 கோடி ஒதுக்கப்பட்டு பல்வேறு திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 539 திருக்கோயில்களில் முழுத்தூய்மை திட்டம் (மாஸ்) கிளினிங் செயல்படுத்தப்பட்டது. திருக்கோயில்களில் நில உரிமை ஆவணங்கள் தமிழ் நிலம் என்கிற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இத்திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  

ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் 9,981 அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகை ரூபாய் 1,000/-, பழநி, திருவரங்கம், திருத்தணிகை, சமயபுரம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய திருக்கோயில்களில் “நாள் முழுவதும் அன்னதானத் திட்டம்” 15890 பக்தர்கள் பயன்பெறுகின்றனர்.  திருக்கோயில்களில் பணிபுரியும் 1,744 முடி திருத்தும் பணியாளர்களுக்கு ரூ.5,000/- மாத ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பயன்பாடற்ற பலமாற்று பொன் இனங்களை 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 9 உதவி பேராசிரியர்கள், ஒரு நூலகர் மற்றும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. சென்னை, தூத்துக்குடி, நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் புதிய கலை கல்லூரிகள்  தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கால பூஜை திருக்கோயில்களில் பூஜைகள் செய்வதற்கு தேவையான தொகை ரூ.130.00 கோடி வழங்கப்பட்டது. திருக்கோயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணம் செய்திட கட்டணமில்லா திருமணத் திட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. திருக்கோயில்களில் உள்ள வேதபாராயணர், ஓதுவார், தவில் / நாதஸ்வர பயிற்சி பள்ளிகளில் பயிலும்  மாணவர்களுக்கு ரூ.3000/-உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்காக ரூ.3.00 கோடியிலிருந்து ரூ6.00 கோடி உயர்த்தப்பட்டுள்ளது.   

புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக ரூ.1.00 கோடியிலிருந்து ரூ3.00 கோடி உயர்த்தப்பட்டுள்ளது.   திருச்செந்தூர், திருவண்ணாமலை, மேல்மலையனூர், சோளிங்கர், மருதமலை, திருத்தணி, பழநி, ஆகிய திருக்கோயில்களில் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. 50,000 திருக்கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்களுக்கு தைத் திருநாளில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் 10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த அகவிலைப்படி உயர்வு செய்து வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருள்மிகு தண்டாபுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரூ 23.81 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம், அன்னதானக் கூடம், கம்பி வட ஊர்தி, நாதமணி மண்டபம் கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவது, பராமரிப்பது, செம்மைப்படுத்துவது தொடர்பாக துறை அலுவலர்கள், அலுவல்சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருக்கோயில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவது, பராமரிப்பது, செம்மைப்படுத்த ஏதுவாக அமையும். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை தலைமையிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.  314 திருக்கோயில்கள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ரூ.5.08 கோடி செலவில் 69 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியலில் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட 27,236.600 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்களை பாரத ஸ்டேட் வங்கி, சாத்தூர் கிளை முதன்மை மேளாலரிடம் ஒப்படைப்பு. பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில் சார்பில் பக்தர்களுக்காக சிற்றுந்து சேவை தொடங்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 100 திருக்கோயில்களில் திருக்குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோயிலில் ரூ.86 லட்சம் செலவில் திருவாரூர் ஆழித்தேர் நடைபெற்றது. 47 முதுநிலைத் திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் செய்வதற்கு இணையவழி பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மதுரை மற்றும் திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஓதுவார் பயிற்சி பள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் திருக்கோயில்களில் யானைகளுக்கு குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளன. சோளிங்கள் அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் கம்பி வட ஊர்தி வெள்ளோட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஐய்யர்மலை அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் கம்பி வட ஊர்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய ஐந்து மலைத் திருக்கோயில்களுக்கு கம்பிவட ஊர்தி பணிகள் செய்ய தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும். திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ரூ11.58 லட்சம் செலவில் சீர்செய்யப்பட்ட தங்கத் தேர் வீதிஉலா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு   சீர்செய்யப்பட்ட தங்கத் தேர்  அமைச்சர் முன்னிலையில் திருவீதிஉலா நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் 17 ஆண்டாக மூடியிருந்த மூன்று வாசல்கள் திறக்கப்பட்டது. பக்தர்கள் மகிழ்ச்சி. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபம் ரூ. 18.10 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையம் அருள்மிகு வனபத்திரகாளியம்மன் திருக்கோயிலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு கிழக்கு வாசல் திறக்கப்பட்டுள்ளது.  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 857 மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகப்பை வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் ரூ. 85 லட்சத்தில் புனரமைப்பு  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடலூரில் வள்ளலார் சர்வதேசமையம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலுக்குச் சொந்தமான 114 சமய நூலகங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்பாடுத்தப்பட்டு வருகிறது. திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்பதற்கு 38 மாவட்டங்களில் வட்டாட்சியர்கள் உள்பட 108 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

அழகர்கோயில், அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ.1 கோடி மதிப்பில் சஷ்டி மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருக்கோயில் யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. வரலாற்றில் முதன்முறையாக சென்னை கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் மகா சிவராத்திரி விழா நடத்தப்பட்டது. மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வாகன மண்டபம் மற்றும் LED திரை தொடங்கி வைக்கப்பட்டது. மதுரை, பழநி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், உட்பட10 திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிராசாதம் வழங்கும் திட்டம், 550 திருக்கோயில்களுக்கு 1500 கையடக்க கருவிகள் (ஸ்வைப்பிங் இயந்திரம்) இணை ஆணையர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. 1500 கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • ragul-inde-15

  டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

 • independence-15

  75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்