சபரிமலையில் வைகாசி தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு
2022-05-07@ 00:30:15

திருவனந்தபுரம்: சபரிமலையில் வைகாசி மாத பூஜைகளை முன்னிட்டு தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளும், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை உட்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
15ம் தேதி காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் வைகாசி மாத பூஜைகளுக்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்றும், நிலக்கல்லில் உடனடி முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
நடப்பாண்டு ஜூலை 15ம் தேதி வரைடெல்லியில் 1,100 பெண்கள் பலாத்காரம்: தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவிப்பு
குற்றாலம் சாரல் திருவிழா: அரிய வகை மலர், பழங்கள், காய்கறிகளுடன் கண்காட்சி
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் நிர்வாக கவுன்சில் கூட்டம்: மாநில முதல்வர்கள் பங்கேற்பு
அமெரிக்கா காதலரை மணந்த ஆந்திர பெண்: திருப்பதியில் இந்துமுறைப்படி திருமணம்
சட்டவிரோத துப்பாக்கி வழக்கு உ.பி பாஜக அமைச்சர் குற்றவாளி: கான்பூர் நீதிமன்றம் அதிரடி
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!