நிலக்கரி ரயில்களை வேகமாக இயக்க ஏதுவாக இதுவரை 1100 ரயில் பயணங்கள் ரத்து; ரயில்வே துறை தகவல்
2022-05-06@ 11:40:05

டெல்லி: நிலக்கரி ரயில்களை வேகமாக இயக்க ஏதுவாக இதுவரை பல்வேறு பயணிகள் ரயில்களின் 1,100 பயணங்களை ரத்து செய்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தியில் வெகுவாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல மாநிலங்களில் பல மணி நேரம் வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, குறிப்பிட்ட சில பயணிகள் ரயில்களின் ஒருசில பயணங்களை ரத்து செய்து அதற்குப் பதிலாக அந்த வழித்தடத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் சரக்கு ரயில்களை வேகமாக இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்தது. அதன்படி கடந்த வாரம் முதல் இந்த நடைமுறையை ரயில்வே அமல்படுத்தியது.
தொடக்கத்தில் குறிப்பிட்ட பயணிகள் ரயில்களின் 620 பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது வரை நாடு முழுவதும் பல்வேறு ரயில் தடங்களிலும் செல்லும் பயணிகள் ரயில்களின் 1,100 பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 500 மெயில் மற்றும் விரைவு ரயில்களின் பயணங்களும், 580 பயணிகள் ரயில் பயணங்களும் அடங்கும்.
மேலும் செய்திகள்
தேசிய பாதுகாப்பு உத்திகள் குறித்து ஆலோசனை; மாநில காவல் துறைக்கு 5ஜி தொழில்நுட்பம்: டிஜிபிக்கள் மாநாட்டில் அமித் ஷா தகவல்
நாங்கள் நெருக்கமாக இருந்தால் டேட்டிங்கா?: நடிகருடனான உறவு குறித்து நடிகை பதில்
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கேரள ராணுவ கேப்டன் சடலம் மீட்பு: மனைவியை பார்த்துவிட்டு திரும்பிய போது சோகம்
ஜனாதிபதியின் செயலராக ஒடிசா கேடர் அதிகாரி நியமனம்
அவர் ஒரு அப்பாவி; நிரபராதி; ஜாக்குலினின் இமேஜை கெடுக்கின்றனர்!: அமலாக்கத்துறை மீது பகீர் குற்றச்சாட்டு
டோலோ650 மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் மருத்துவர்களுக்கு இலவசப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் விற்பனை கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தகவல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...