தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி : வெயிலின் கொடுமைக்கு மத்தியில் ஜில் அறிவிப்பு!!
2022-05-06@ 10:09:15

சென்னை: தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் வெயில் நீடித்து வருகிறது. இருப்பினும், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று உருவானது. இதன் காரணமாக இப்பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடியே இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் . இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெய்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கலம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்கிளல் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தனை நாளும் வெயிலின் கொடுமையில் தமிழக மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், இந்த ஜில் அறிவிப்பானது, பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடியேற்றினார்
கோளம்பாக்கம் அடுத்த படூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
போலி பல்கலை மூலம் ரூ.15 ஆயிரத்திற்கு டாக்டர் பட்டம் விற்பனை
இன்றைய இளைஞர்கள் நாட்டுப்புற கலைகளை கற்று மேல்நாடுகளுக்கு சென்று கலையினை வளர்க்க வேண்டும்; மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் வலியுறுத்தல்
போலி கன்டெய்னர் கம்பெனிகள் தொடங்கி ரூ.50 கோடி மோசடி, வெளிநாடு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி கைது; மும்பை விமான நிலையத்தில் தனிப்படை அதிரடி
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!