தமிழகம் முழுவதும் ஷவர்மா கடைகளில் அதிகாரிகள் சோதனை
2022-05-06@ 01:17:55

மதுரை: மதுரையில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தி, 10 கிலோ அழுகிய கோழிக்கறியை பறிமுதல் செய்தனர். 5 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும் காஞ்சிபும், திருப்பூர் மாவட்டங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. கேரளாவில் சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டு, ஒரு மாணவி பலியானார். இச்சம்பவம் நாடு முழுக்க அதிர்வினை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக மதுரை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுரையில் ஜெயராம் தலைமையில் குழு, குழுவாக பிரிந்து முக்கிய இடங்களின் அனைத்து ஷவர்மா கடைகளிலும் திடீர் சோதனை நடத்தினர். 52 கடைகளில் 30க்கும் அதிக குழுவினராக பிரிந்து இந்த அதிரடி சோதனையில் தனித்தனியாக ஈடுபட்டனர்.
ஷவர்மா முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். இதில் சில கடைகளில் கெட்டுப்போன பழைய கோழிக்கறி பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து, 5 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். மேலும் பல்வேறு கடைகளில் இருந்தும் 10 கிலோ அளவிற்கான அழுகிய கோழிக்கறியையும் பறிமுதல் செய்தனர். இதே போல காஞ்சிபும், திருப்பூர் உட்பட பல மாவட்டங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அதிகாரிகள் கூறும்போது, ‘‘விதிமீறலுடன் இருந்த 5 கடைகளுக்கு நோட்டீஸ் தரப்பட்டது. 10கிலோ கோழிக்கறி பறிமுதல் செய்யப்பட்டது.’’ என்றனர்.
மேலும் செய்திகள்
செய்யூர் அருகே விளம்பூர் பகுதியில் முத்தாலம்மன், பொன்னியம்மன் கோயில்களில் ஆடி திருவிழா கோலாகலம்
வாலிபர் கைது
ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
திம்மையன் பேட்டை ஊராட்சியில் கைபம்பு; இங்கே... தண்ணீர் எங்கே...? சீரமைக்க இருளர் மக்கள் வேண்டுகோள்
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இரவு நேரங்களில் மட்டும் வரும் அரசு பேருந்து: பயணிகள் குழப்பம்
கொலை வழக்கில் அப்ரூவராக மாற முயன்றதால் கத்தியால் சரமாரி குத்தி ரவுடி கொலை
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!