மருதமலை பாம்பாட்டி சித்தர் யார்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
2022-05-06@ 01:01:01

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கோவை (வடக்கு) தொகுதி எம்எல்ஏ அம்மன் கே அர்ஜுனன்(அதிமுக): மருதமலையில் உள்ள பாம்பாட்டி சித்தர் கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு: பாம்பாட்டி சித்தர் கோயிலுக்கு அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடக்க வேண்டியுள்ளது. இருப்பினும் முன்கூட்டியே அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மானிய கோரிக்கை அறிவிப்புகளிலே பணிகள் மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை புரட்டி பார்த்தால் தெரியும்.
அம்மன் கே.அர்ஜுனன்: மருதமலை முருகன் கோயில் பிரசித்தி பெற்றது என்றால் அது பாம்பாட்டி சித்தரால் தான். அமைச்சர் சொன்னதை செய்வார் என்றால் பாம்பாட்டி சித்தர் தமிழ்நாட்டில் உள்ள அத்துணை பக்தர்களுக்கும் அருள் புரிவார்.
சபாநாயகர் அப்பாவு: அவையிலே இருங்க, போயிடாதீங்க.
அமைச்சர் துரைமுருகன்: பாம்பாட்டி சித்தர் பற்றி உறுப்பினர் இவ்வளவு சொன்னாரே, அவர் யாருங்க சொல்லுங்க அவருடைய வரலாற்றை உறுப்பினர் சொன்னால் நல்லாயிருக்கும்.
அமைச்சர் சேகர்பாபு: கி.பி. 12ம் நூற்றாண்டில் மருதமலை முருகன் கோயிலில் அவர் தவம் இருந்து, சித்து வேலை செய்து, சர்ப்பமாக (பாம்பு) முருகனை வழிப்பட்டார் என்பது வரலாறு. தென்காசி மாவட்டத்தில் அவர் ஜீவ சமாதி அடைந்தார். அந்த ஜீவ சமாதியை தனியார் நிர்வகித்து வருகின்றனர். சித்தமெல்லாம் சிவ மையம் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஜீவநாடியில் நிறைந்து இருப்பவர்கள் எல்லாம் சித்தர்கள்தான். அதை முழுமையாக இந்த அரசு ஏற்று கொண்டதால் தான் 3 சித்தர்களுக்கு விழா எடுக்க உள்ளதாக மானிய கோரிக்கையில் தெரிவித்துள்ளோம். நீங்கள் விட்டு சென்றதை, தொடாத பணிகளை இந்த அரசு செய்து வருகிறது.
Tags:
Marudhamalai Pambatti Sidhar Minister Sekarbabu's explanation மருதமலை பாம்பாட்டி சித்தர் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்மேலும் செய்திகள்
பிரின்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நிறைவு; மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை.! அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்
விடுமுறை தினத்தை பயன்படுத்தி கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள்: பரிதவிக்கும் பயணிகள்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது!: எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்த டிடிவி தினகரன்..!!
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு சைக்ளிங் லீக் ஆக.27ல் தொடக்கம்
சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் செப். 12ம் தேதி தொடங்குகிறது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!