கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறப்பு
2022-05-05@ 15:58:47

திருமலை: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு ஆண்டுதோறும் 3 கட்டங்களாக குடிநீர் விநியோகம் செய்வது வழக்கம். ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு ஒப்பந்தப்படி ஆந்திர அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை கண்டலேறு அணை செயற்பொறியாளர் விஜய்குமார், தெலுங்கு கங்கை திட்ட தலைமை பொறியாளர் ஹரி நாராயணா ஆகியோர் உத்தரவுப்படி கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.
அதன் முதற்கட்டமாக இந்த ஆண்டு 5 டிஎம்சி தற்போது திறக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு மொத்தம் 2,500 கனஅடி தண்ணீர் செல்லும். ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்ட விவசாயிகளுக்கான பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படும்போது வழங்கவும் தயாராக உள்ளோம். அதற்கேற்ப தண்ணீரின் இருப்பு உள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர், நாளை இரவு அல்லது நாளை மறுதினம் அதிகாலை சென்னை பூண்டி நீர்த்தேக்கத்தை அடையும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
மின்னணு இயந்திரம் தவறான பயன்பாடு ஜனநாயகத்திற்கு கடும் சவால் 11 எதிர்க்கட்சிகள் தீர்மானம்
சுதந்திர தின விழாவில் பயங்கரவாத சதியா? இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் இளம்பெண் கைது: ஐதராபாத், நேபாளத்தில் இருந்து உதவிய வாலிபர்கள்
இந்திய விளையாட்டு துறையின் பொற்காலம் விரைவில் ஆரம்பம்: பிரதமர் மோடி நம்பிக்கை
இன்று மாலை ஜனாதிபதி முர்மு சுதந்திர தின உரை
காஷ்மீரில் தீவிரவாத தொடர்பு முஜாகிதீன் தலைவன் மகன், 3 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
ஆர்எஸ்எஸ் டிபி.யில் தேசியக் கொடி படம்: சர்ச்சைக்குப் பிறகு திடீர் மாற்றம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!