எழுத்து தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களை புறக்கணித்துவிட்டு மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்தின் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக புகார்
2022-05-05@ 11:05:16

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் எழுத்து தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களை புறக்கணித்துவிட்டு மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்தின் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய 'Environmental Scientist' வேலைக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2020-ம் ஆண்டில் எழுத்து தேர்வு நடந்துள்ளது.
இதில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் சிலரை நேர்முக தேர்வுக்கே அழைக்காமல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய காலி பணியிடங்களை நிரம்பியதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேர்காணல் நடத்த கூறி அணையிட்டும் அதிகாரிகள் அதனை மதிக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தமிழக முதலமைச்சர் தலையிட்டு அதிமுக ஆட்சியில் இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த மாணவர் தினேஷ் கூறுகையில் எங்களது பட்டத்தில் M.sc Environmental Science என்பதற்கு பதிலாக M.sc Agriculture Environmental Science என உள்ளது என கூறி புறக்கணித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த வாரம் மாசு கட்டுப்பட்டு வாரிய தலைவருடன் பேச முயற்சித்தும் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார்.
நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்பதை அறிந்த அதிகாரிகள் அவசர அவசரமாக ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பணி நியமன பட்டியலை கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வெளியிட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
சென்னையில் தனியார் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு
பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி காலமானார்
ஓங்கூர் பாலம் சீரமைப்பு பணி, தொடர் விடுமுறை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உட்பட 5 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்
தாம்பரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு
தமிழகத்தில் நடந்த லோக் அதாலத்தில் 78 ஆயிரம் வழக்குகளில் தீர்வு: ரூ.440 கோடி பைசல்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!