பெரம்பூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
2022-05-05@ 09:25:34

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பெரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதைையொட்டி, கடந்த மாதம் 24ம் தேதி காலை 9 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை மண்ணடியில் கூழ்வார்த்தல், கிராம தேவதை செல்லியம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், 3ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மகா கணபதி பூஜை, மண்டப அலங்காரம், மாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து ஹோமம், மாலை 6 மணிக்கு யாகசாலை பிரவேசம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகா பூர்ணாஹூதி ஆகியவை நடந்தது.
நேற்று காலை 9 மணிக்கு திருக்கடம் புறப்பாடு நிகழ்வும் பின்னர் 10 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீரை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று கோயிலை வலம் வந்து கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர், மகாதீபாராதனையும், அன்னதானமும், மாலை 3 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்வும், இரவு 9 மணிக்கு திரவுபதி அம்மன் உற்சவர் புஷ்ப அலங்காரத்துடன் திருவீதியுலா நடந்தது. நிகழ்வில், கோயில் நிர்வாகிகள் எல்.ரஜினி, தசரதன், வாசுதேவன், பொன்முடி, ஞானமுத்து, மாணிக்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது!: எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்த டிடிவி தினகரன்..!!
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு சைக்ளிங் லீக் ஆக.27ல் தொடக்கம்
சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் செப். 12ம் தேதி தொடங்குகிறது
அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை: மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி
அமமுகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்: சசிகலா ஆதரவாளர்கள் குழப்பம்..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!