ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.108 கோடி சொத்து மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை
2022-05-05@ 00:53:11

சென்னை: மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.108 கோடி மதிப்பிலான சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரையின்படி செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 11 நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீண்டும் அறக்கட்டளை வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.
ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை சுமார் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்திருந்த 46 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தற்போது முதற்கட்டமாக 22 ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றுவதற்கு பட்டிபுலம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் கிழக்கு புறமாக பண்ணை வீடுகளாகவும், பொழுதுபோக்கு விடுதிகளாகவும், தோட்டங்களாகவும், அதில் மதில் சுவர் ஏற்படுத்தி ஆக்கிரமிப்பு செய்து வந்த இடங்களையும், சாலுவான்குப்பம் கிராமத்தில் இறால் குஞ்சு பொறிப்பகம் உணவகம், பேக்கிரி, மதில் சுவர்கள் அமைத்தும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அறக்கட்டளை வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது.
ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.108 கோடி ஆகும். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் அரசு நிதி மூலம் சுமார் ரூ.10.50 கோடியில் மதில் சுவர்கள் அமைக்க அரசாணை பெறப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 1,057 பேர் பாதிப்பு; உயிரிழப்பு ஏதும் இல்லை : 1,429 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
செல்போனில் காதலியுடன் மோதல் தீக்குளித்த காதலன் கவலைக்கிடம்
கருணாநிதி நினைவு நாள்: கேரள முதல்வர் பினராய் விஜயன் தமிழில் டுவீட்
ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ராணிப்பேட்டையில் 2வது நாளாக நிதிநிறுவன உரிமையாளரின் நண்பர் வீட்டில் சோதனை
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!