ஹில்குரோவ்- ஆடர்லி இடையே மண்சரிவு; ஊட்டி மலை ரயில் நடுவழியில் நிறுத்தம்: சுற்றுலா பயணிகள் அவதி
2022-05-04@ 21:37:42

குன்னூர்: ஹில்குரோவ்- ஆடர்லி இடையே மண்சரிவு ஊட்டி மலை ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். .
உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்தால்தான் தங்களது இன்ப பயணம் நிறைவு பெறும் என்று கருதுகிறார்கள்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் 208 வளைவு, 16 குகை, 250 பாலங்கள் வழியே இயற்கை அழகை கண்டு ரசிப்பதோடு இயற்கை காற்றுடன் மலர் மற்றும் மூலிகை வாசனையை நுகர்ந்தவாறு 5 மணி நேரம் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து 170 பயணிகளுடன் ஊட்டிக்கு புறப்பட்டது.
குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்திருந்ததால் ரயில்வே டிராக்மேன் ஊழியர்கள் ரயில் பாதையை ஆய்வு செய்தனர். அப்போது ஹில்குரோவ்-ஆடர்லி இடையே தண்டவாளத்தில் ராட்சத பாறை மற்றும் மரம் சரிந்து மண் குவியலாக கிடந்ததை பார்த்தனர். இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக ஊட்டி நோக்கி வந்துகொண்டிருந்த மலை ரயில் ஓட்டுநரை தொடர்பு கொண்டு பேசினர்.
தண்டவாளத்தில மண்சரிவு ஏற்பட்டிருப்பதால் ரயிலை ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் நிறுத்துமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து மலை ரயில் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு தண்டவாளத்தில் விழுந்து கிடந்த ராட்சத பாறை, கற்கள், மரம் உள்ளிட்டவைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1.30 மணி நேரம் போராடி ஊழியர்கள் தண்டவாளத்தை சரி செய்தனர். அதன்பின்னர் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் இருந்து குன்னூர் மலை ரயில் புறப்பட்டு சென்றது.
தண்டவாளத்தில் மண் சரிவு காரணமாக நடு வழியில் மலை ரயில் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். அதே நேரத்தில் மண் சரிவை ரயில்வே ஊழியர்கள் உடனடியாக பார்த்து நடவடிக்கை எடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் செய்திகள்
உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் திருவிழா; பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
மருத்துவான்பாடி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல்; கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை
வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் வெண்கலை சிலை; கிராம சபையில் தீர்மானம்
குடிபோதை தகராறில் விபரீதம்; மாமாவை கம்பியால் அடித்து கொன்ற மைத்துனர் கைது
கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம், மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து தெலுங்கு குறும்பட தயாரிப்பாளர் பலி; குடும்பத்தினர் 5 பேர் படுகாயம்
மாற்று இடம் வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர்; அலுவலகத்தை நரிக்குறவர்கள் திடீர் முற்றுகை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!