ஊட்டி மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
2022-05-04@ 16:58:35

கோத்தகிரி: ஊட்டி மலைப் பாதையில் கோத்தகிரி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயமடைந்தனர். ஐதராபாத்திலிருந்து ஊட்டிக்கு நந்தகோபால் என்பவர் தனது உறவினர்கள் 12 பேருடன் வேனில் சுற்றுலா வந்தார். வேனை தங்க வேல் மணி ஓட்டினார். 2 நாட்கள் ஊட்டியை சுற்றிப் பார்த்துவிட்டு கோத்தகிரி வழியாக கோவையை நோக்கி நேற்று வேனில் புறப்பட்டனர். கோத்தகிரி கொட்டக்கொம்பை பகுதியில் வந்தபோது வேனின் பிரேக் பழுதாகி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாக வேண்டிய வேனை டிரைவர் சாதுரியமாக வலதுபுற சாலையோர தடுப்பில் மோதி நிறுத்தினார்.
இதில் வேன் ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவரின் சாதுர்யத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் வேனில் பயணித்த ஸ்ரேயா சிணானி, சிரியா, சரிதா,ரிஷி, லக்ஷ்மி ராமன் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அம்பானி, அதானிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய அரசு: டி.ராஜா தாக்கு
மூச்சு திணறல் நோயால் குழந்தை அவதி மகள்-மகனை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை: கரூர் அருகே சோகம்
பழநி முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி திடீர் தரிசனம்
தொடர்ந்து 12 மணிநேரம் 1330 திருக்குறளுக்கேற்ப பரதநாட்டிய கலைஞர்கள் நடனமாடி சாதனை
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி என்எல்சி ஊழியர் ரூ.27 லட்சம் மோசடி
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி: செல்லூர் ராஜூ அதிரடி
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!