விலை வீழ்ச்சியால் கொடைக்கானலில் மலைப்பூண்டு டன் கணக்கில் தேக்கம்
2022-05-04@ 14:45:47

கொடைக்கானல்: கொடைக்கானலில் மலைப்பூண்டு விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் டன் கணக்கில் பூண்டுகள் தேக்கமடைந்துள்ளன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட பூண்டு வகைகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. கொடைக்கானல் பூண்டு, விவசாயிகளின் பல ஆண்டு போராட்டத்துக்கு பின், மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்தது. அதன் பின்னர் பூண்டு விலை ஒரே சீராக முதல் ரகம், 2ம் ரகம் என தரத்தின் அடிப்படையில் ரூ.400 முதல் 500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் பூண்டு விவசாயத்தை மலைக்கிராம விவசாயிகள் ஆர்வத்துடன் செய்து வந்தனர்.
தற்போது மலைப்பூண்டு விலை படு வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ.150 முதல் ரூ.250 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது. இதனால் தாங்கள் சாகுபடிக்கு செலவழித்த வகைகளுக்கு கூட முதல் கிட்டவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் உரிய விலை கிடைக்காததால் குடோன்களில் பூண்டு மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. எனவே பூண்டு விவசாயிகள் நலன் கருதி, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மலைப்பூண்டு மொத்த கொள்முதல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைத்து தர தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திண்டுக்கல் அருகே புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
தோவாளை-தாழக்குடி சாலை; ரூ.3.28 கோடியில் சீரமைப்பு: ரூ.3.87 கோடியில் ஆற்றின்குறுக்கே பாலமும் அமைக்கமுடிவு
மேட்டூர் அணைக்கு 19,000 கனஅடி நீர்வரத்து
வேலூரில் பொதுமக்கள் வேதன; ரூ.32.52 கோடியில் கட்டிய விமான நிலையம் பயன்பாட்டிற்கே வராமல் பாழாகும் அவலம்: முட்புதர்கள் சூழ்ந்து காடு போல் மாறியது
கேரளாவில் 31ம் தேதி ஓணம் பண்டிகை; தோவாளையில் அறுவடைக்கு தயாரான பூக்கள்: ஆர்டர்களும் குவிந்து வருகிறது
பழநி மலைக்கோயில் ரோப்காரில் புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...