ஐதராபாத் சுற்றுவட்டாரத்தில் விடிய, விடிய கொட்டிய கனமழை: வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
2022-05-04@ 12:14:00

தெலுங்கானா: ஐதராபாத் சுற்றுவட்டாரத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் பயங்கரமாக சுட்டெரித்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில், வீடுகளிலும், கடைகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக சித்திப்பூர் மாவட்டத்தில் சபிப் நகரில் 108 மி.மீ. மழையும், ஐதராபாத்தில் உள்ள செகந்திராபாத் அருகே உள்ள சிதம்பூர் மண்டியில் 72.8 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
காலை நிலவரப்படி அதிகபட்சமாக பன்சிலால்பேட்டையில் 67 மி.மீ. மழையும், மேற்குமாரடைப்பள்ளியில் 61.8 மி.மீ. மழை பெய்திருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்தது. தொடர்ந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, அனல் காற்று வீசி வந்த நிலையில் திடீரென மழை பெய்தது. இந்த மழை அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்தாலும், தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த திடீர் மழையினால் வீடுகள், கடைகளில் வெள்ளநீர் புகுந்தும், சில இடங்களில் சாலைகளே தெரியாத அளவிற்கு மழைநீர் தேங்கியும் உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என மாநில அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
விவசாயிக்கு இலவச மின்சாரம் ரத்தானால் ஆழாக்கு கூட மிஞ்சாது: கடும் உணவு தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா
சுகாதார திட்டங்களுக்கான ஒன்றிய அரசு தரும் நிதியை விரைவாக பெற வேண்டும்: மாநிலங்களுக்கு அறிவுரை
தெலங்கானாவில் வாகனம், ரயில்கள் நிறுத்தம் இருந்த இடத்தில் 1 நிமிடம் தேசிய கீதம் பாடிய மக்கள்: சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு
கூட்டு பலாத்காரம், 7 பேர் படுகொலை பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலை: பொதுமன்னிப்பு என்ற பெயரில் குஜராத் அரசு சர்ச்சை உத்தரவு
ஆந்திராவில் உள்ள 10 தங்க சுரங்கங்களை மீண்டும் திறக்க ஏலம்
இலவசம்னு சொல்றதை நிறுத்துங்கள்: கெஜ்ரிவால் ஆவேசம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!