பங்காரு அடிகளாரின் வழிகாட்டுதலின்படி செவ்வாடை பக்தர்களின் உலக புவி தின கொண்டாட்டம்
2022-05-04@ 00:51:04

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், ஆரம்பகாலம் தொட்டே இயற்கையை வணங்கி, பாதுகாத்து போற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். கடந்த 1988ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் இயற்கை வள மேம்பாட்டு மாநாடு நடத்தினார். ஆன்மிக வழிபாட்டு முறையில் ஆரம்ப காலம் முதல் பஞ்ச பூத வழிபாட்டு முறையை நடைமுறைப்படுத்தி செயல்படுத்துகிறார். இந்நிலையில், உலக புவி தினத்தை முன்னிட்டு, உலகெங்கும் உள்ள செவ்வாடை பக்தர்கள் பூமியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என பங்காரு அடிகளார் அறிவித்தார்.
அதன்பேரில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் அமெரிக்கா, கனடா, மலேசியா, பிரான்ஸ், ஸ்ரீலங்கா, சுவிஸ் ஆகிய வெளிநாடுகளில் உள்ள செவ்வாடை பக்தர்கள், அவரவர் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் இருந்த குப்பைகளை சுத்தம் செய்தல், மரக்கன்றுகள் நடுதல், அதற்கான நீர் பாசன ஏற்பாடுகளை செய்து பராமரிப்பு செய்தல், நீர்நிலைகளை தூய்மை செய்தல், மருத்துவமனை, பள்ளி வளாகம் தூய்மை செய்தல், கோயில் உழவாரப் பணிகளில் ஈடுபட்டனர். இப்பணி, கடந்த 23ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் தொடங்கி 24ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை உலகெங்கும் உள்ள செவ்வாடை பக்தர்களால் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமையில், உலகெங்கும் உள்ள ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர்களும், செவ்வாடை பக்தர்களும் செய்தனர்.
Tags:
Bangaru Beats Mars Devotee World Earth Day Celebration பங்காரு அடிகளாரின் செவ்வாடை பக்தர் உலக புவி தின கொண்டாட்டம்மேலும் செய்திகள்
இடுக்கி மாவட்டத்தைப் பாதுகாக்க தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும்: கேரள முன்னாள் எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு
பஸ்-வேன் மோதியதில் மூன்று பேர் பலி
புதுவையில் பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தில் ஊழல்: நாராயணசாமி பரபரப்பு பேட்டி
பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கானோர் கடலில் நீராடி சுவாமி தரிசனம்
திருப்பூரில் பனியன் கான்ட்ராக்ட் நிறுவனத்தில் டெய்லர் வேலைக்கு தமிழர்கள் தேவை என விளம்பர பதாகை: சமூக வலைதளத்தில் வைரல்
கிராமப்புற கல்விக்கு உதவும் ஜாமீன் வழக்கு டெபாசிட் தொகை ஐகோர்ட் கிளை உத்தரவுகளால் ஸ்மார்ட் ஆகும் அரசு பள்ளிகள்: தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்கிறது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!