ஈசூர் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட 100வது நாள் விழா
2022-05-04@ 00:47:43

மதுராந்தகம்: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இதைதொடர்ந்து, மதுராந்தகம் ஒன்றியம் பூதூர் ஊராட்சி ஈசூர் கிராமத்தில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அப்பகுதி பட்டதாரி பெண்கள் மூலம் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த வகுப்புகள் தொடர்ந்து 100வது நாளை நிறைவடைந்ததையொட்டி, அதனை கொண்டாடும் விதமாக ஈசூர் அரசு நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி 100வது நாள் நிகழ்ச்சி நடந்தது.
கிராமத்தில் 6 பட்டதாரி பெண்கள், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு, வகுப்புகள் நடத்தி, கல்வி கற்க செய்தனர். இந்த ஆசிரியர்களை பாராட்டும் விதமாக ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஊக்க பரிசாக மாதம் ரூ.500 வழங்குகிறார். மேலும், இந்நிகழ்ச்சியை ஒட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார். நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேதகிரி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். இதில் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலமாக பயன் பெறும் பள்ளி மாணவர்களின் வில்லு பாட்டு, நடனம், நாடகம் உள்பட பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
Tags:
Isoor Village Home Search Education Project 100th Day Celebration ஈசூர் கிராம இல்லம் தேடி கல்வி திட்ட 100வது நாள் விழாமேலும் செய்திகள்
விளையாட்டு போட்டிகளோடு திறனாய்வு பணிகளையும் மேற்கொள்ள உத்தரவு பணிச்சுமையால் திண்டாடும் உடற்கல்வி ஆசிரியர்கள்: காலியிடங்கள் நிரப்பப்படுமா?
திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது: 26ம் தேதி தேரோட்டம்
சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழா: 150 வகை நெல்ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன
ஊரக வளர்ச்சித்துறை பட்டியல் தயாரிப்பு: 99 ஓவர்சியர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவி
எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவனிடம் விசாரிக்க விஜிலென்ஸ் போலீசார் முடிவு: வெளிநாட்டில் முதலீடு மற்றும் ஹார்டு டிஸ்க் ஆய்வு முடிந்தது
தூத்துக்குடி துறைமுகத்தில் ஹைட்ரஜன் பூங்கா
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!