வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி தரப்பில் விளக்கம்.!
2022-05-02@ 19:54:24

சென்னை: வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர், ஒரே நாளில் பல நாட்களுக்கான வருகை பதிவுக்கு கையெழுத்தடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வருகைப் பதிவேட்டில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற தகவல் பரவியது இந்த நிலையில் வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி கூறியுள்ளது.
முதுநிலை கலந்தாய்வின் இறுதிச்சுற்று நிறைவடைந்த நிலையில் மாணவர்களின் வருகைப்பதிவுக்காக வருகைப்பதிவேடு திறக்கப்பட்டது. மாணவி மற்ற மருத்துவர்களுக்கோ அல்லது தான் வராத நாட்களுக்கோ கையொப்பம் இடவில்லை என்று தெரிவித்துள்ளது. கையொப்பமிட்ட சம்பவம் குறித்து பயமாக இருப்பதாகவும், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவி புகார் அளித்துள்ளார் என்று மருத்துவகல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு சுய தொழில் தொடங்க கடனுதவி; கலெக்டர் ஆர்த்தி தகவல்
தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும்
காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்
சர்வதேச செஸ் போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக டேபிள், அரங்குகள் பிரிக்கும் பணி தீவிரம்
மின் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் கழிவுநீர் குட்டையான ரங்கசாமி குளம் சீரமைக்க பொதுக்கள் கோரிக்கை
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!