சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி 'முத்தமிழறிஞர் கலைஞர் சாலை' என்று அழைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
2022-05-01@ 21:44:16

சென்னை: நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்பது பெருமை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்து முதல்வர் பேசி வருகிறார். தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்ச்சியில் நெடுஞ்சாலைத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு. சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற நெடுஞ்சாலை துறையின் 75வது ஆண்டு பவள விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என்று அழைக்கப்படும் என்று அவர் கூறினார். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் தொடர்புடையது சாலைகள். சாலை சரியில்லை என்றால் முதலில் திட்டுவது அரசாங்கத்தைத்தான்.
அரசிற்கு நற்பெயரையும், அவப்பெயரையும் பெற்று தரவேண்டும் என சொன்னால் அதற்கு நெடுஞ்சாலைத்துறை தான் காரணமாக அமையும்” என்று கூறினார். தமிழ்நாடு கட்டமைப்பில் வளர்ச்சி பெற மிக முக்கிய பங்கு வகிப்பது நெடுஞ்சாலைத்துறை தான் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 2026 க்குள் தரைப்பாலங்களை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க இருக்கிறோம். முதற்கட்டமாக 648 தரைபாலங்கள் அகற்றப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 10வது சுற்று போட்டிகள் தொடங்கின: பதக்க வாய்ப்பை உறுதி செய்யுமா இந்திய அணி?
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு.: ஆக.10-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
கோட்டூர்புரம் நூலகத்தை மாற்ற இடைக்கால தடை விதித்தது ஏன்?: ஓய்வு நீதிபதி சந்துரு பரபரப்பு
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கோரி அரசு அறிவித்த மின்னஞ்சலில் தமாகாவினர் பதிவிட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரமாண்ட நிறைவு விழா
சென்னை ஆலந்தூரில் பேருந்து மோதி பெயர் பலகை விழுந்து விபத்து.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ரூ.3 லட்சம் நிதியுதவி
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!