3வது, 4வது அணிகளால் முடியாது...! பாஜகவை தோற்கடிக்க 2வது அணிதான் ‘பெஸ்ட்’; பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி
2022-05-01@ 21:27:09

புதுடெல்லி: பாஜகவை தோற்கடிக்க 3வது, 4வது அணிகளால் முடியாது; இரண்டாவது அணியால் தான் முடியும் என்று பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. அவரும், காங்கிரஸ் கட்சி வலுபெற தேவையான ஆலோசனைகளை வழங்கினார். ஆனால், திடீர் திருப்பமாக தான் காங்கிரசில் சேரப் போவதில்லை என்று அறிவித்தார். இந்நிலையில் தனியார் டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘வரவிருக்கும் 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றால், மற்ற கட்சிகள் வலுவாக வேண்டும்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணியாக உருவாகுமா? அதற்கு நான் உதவுவதாக கூறுகிறார்கள். ஆனால் அப்படியில்லை. பாஜகவை தோற்கடிக்க மூன்றாவது அல்லது நான்காவது முன்னணியால் முடியாது. ஆளும் பாஜகவை முதல் முன்னணி என்று கூறினால், அதற்கு அடுத்த இடத்தில் இரண்டாவது முன்னணியால் மட்டுமே அவர்களை தோற்கடிக்க முடியும். அப்படியென்றால் பாஜகவை தோற்கடிக்க மற்றொரு முன்னணி வலுவாக உருவாக வேண்டும்.
அப்போதுதான் அவர்களை வீழ்த்த முடியும். என்னைப் பொருத்தவரை காங்கிரஸ் மட்டுமே இரண்டாவது பெரிய கட்சி என்பதால், அவர்களால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும். அதற்காக காங்கிரசை இரண்டாவது முன்னணி என்று கருதமுடியாது. நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக இருப்பதால், அவர்களால் இரண்டாவது முன்னணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்த முடியும். எனவே பாஜகவை தோற்கடிக்க, மற்ற கூட்டணி கட்சிகள் இரண்டாவது முன்னணியை நோக்கி பயணிக்க வேண்டும்’ என்று கூறினார்.
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் கோயிலில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி
யுஜிசி நெட் 2-ம் கட்ட தேர்வு ஒத்திவைப்பு
கியூட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கோரிக்கை
இளம்பெண்ணை தாக்கிய விவகாரம், பாஜ நிர்வாகியின் வீடு இடிப்பு; உபியில் அதிரடி நடவடிக்கை
வெங்கையா நாயுடு பதவிக்காலத்தில் மாநிலங்களவை செயல்பாடு புதிய உச்சத்தை தொட்டது; பிரதமர் மோடி பாராட்டு
மபி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 14 கார்கள் அடித்து செல்லப்பட்டன; 50 பேர் உயிர் தப்பினர்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!