இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட கேரள மீனவர் உள்பட 4 பேர் விடுவிப்பு: தமிழக அரசுக்கு மீனவர்கள் பாராட்டு
2022-05-01@ 02:03:41

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த 3 மீனவர்கள் ”பிளசிங் என்கிற விசைபடகில் பிப்ரவரி 17ம் தேதி அந்தமானிலிருந்து ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்தபோது இயந்திரம் பழுதாகி படகை இயக்க முடியாமல் காற்றின் போக்கில் மிதந்து சென்ற வேளையில் மார்ச் 7ம் தேதி இந்தோனேஷிய கடல் பகுதியில் 8 மீனவர்களையும் படகுடன் இந்தோனேஷிய கடற்படை கைது செய்தது.
பின்னர் தமிழக அரசின் சார்பில் இதுகுறித்து வெளியுறவுத் துறைக்கு கடிதம் வாயிலாகவும் தமிழக முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியதன் அடிப்படையில் 45 நாட்களுக்கு பின்னர் அவர்களில் 4 மீனவர்கள் 25ம் தேதி இந்தோனேஷிய காவல்துறையால் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், மீதமுள்ள 4 பேரையும் படகையும் மீட்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. விடுதலையான இவர்கள் 4 பேரும் 28ம் தேதி இரவு சென்னை வந்து சேர்ந்தனர். இவர்களில் 3 பேர் குமரி தூத்துரும், ஒருவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவரும் ஆவர். இவர்களுக்கான பயண கட்டணத்தை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டுவாழ் தமிழர்கள் நலத்துறை ஏற்றுக்கொண்டது.
சென்னை விமானநிலையம் வந்து சேர்ந்த 4 மீனவர்களையும் மாநில திமுக சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் நிருபர்களிடம் மீனவர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் மீட்கப்பட காரணமான முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. மீதமுள்ள நான்கு மீனவர்களையும் படகையும் முதல்வர் மீட்டுத் தருவார்’’ என்றனர். பின்பு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடியேற்றினார்
கோளம்பாக்கம் அடுத்த படூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
போலி பல்கலை மூலம் ரூ.15 ஆயிரத்திற்கு டாக்டர் பட்டம் விற்பனை
இன்றைய இளைஞர்கள் நாட்டுப்புற கலைகளை கற்று மேல்நாடுகளுக்கு சென்று கலையினை வளர்க்க வேண்டும்; மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் வலியுறுத்தல்
போலி கன்டெய்னர் கம்பெனிகள் தொடங்கி ரூ.50 கோடி மோசடி, வெளிநாடு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி கைது; மும்பை விமான நிலையத்தில் தனிப்படை அதிரடி
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!