SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மே 4-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வட மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

2022-04-30@ 13:46:55

டெல்லி: வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல், அதை சார்ந்த பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மே 4-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி:

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் மே 4, 5ல் அந்தமான் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. தெற்கு அந்தமான், தென் கிழக்கு வங்கக்கடலில் மே 4ம் தேதி முதல் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்பிருப்பதால் மே 4ல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

வட மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை:

மத்தியப்பிரதேசம், அரியானா, கிழக்கு ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி, மேற்கு உத்திரப்பிரதேசம், வட தெலுங்கானாவில் 3 நாளுக்கு வெப்ப அலை வீசும்.

மே 3,4ல் வட மாநிலங்களில் புழுதி புயல் வீசக்கூடும்:

மே 2 முதல் 4ம் தேதி வரை பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, உத்திரப்பிரதேசம், மேற்கு ராஜஸ்தானில் புழுதி புயல் வீச வாய்ப்புள்ளது.

இன்றும், நாளையும் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு:

இன்றும், நாளையும் கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • ragul-inde-15

    டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

  • independence-15

    75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்