கோடநாடு எஸ்டேட்டில் என்னென்ன பொருட்கள் இருந்தன?: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் 2வது நாளாக துருவிதுருவி விசாரணை..!!
2022-04-30@ 13:00:49

கோவை: கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் 2வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கோடநாடு வழக்கு விவகாரம் தொடர்பான விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. தனிப்படை போலீசார் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் 2வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் 15 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன்.
போயஸ் கார்டன், கொடநாடு என்று ஜெயலலிதா எங்கு சென்றாலும், அவரின் நிழல்போல உடன் பயணித்தவர் பூங்குன்றன். ஜெயலலிதா சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் அவருக்குத் தெரியும். கோடநாடு எஸ்டேட்டில் என்னென்ன மாதிரியான பொருள்கள் இருந்தன, ஜெயலலிதா அறையில் என்னென்ன விஷயங்கள் இருந்தன, எந்த மாதிரியான ஆவணங்கள் இருந்தன என்று பூங்குன்றனிடம் விசாரித்துவருகின்றனர். நேற்று 6 மணி நேரத்துக்கு மேலாக பூங்குன்றனிடம் விசாரணை நடந்த நிலையில் கோடநாடு விவகாரம் பற்றி துருவிதுருவி கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
கோவை நகைக்கடையில் ரூ.55 லட்சம் நகை மோசடி ‘ஆன்லைன் ரம்மி’யில் இழந்த சூபர்வைசரிடம் விசாரணை
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைப்படி பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
கி.மு. 300 முதல் 10-ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில் உருவானது கீழடி நகரம்; மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தகவல்
கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’
பலகோடி மோசடி செய்த உரிமையாளர்கள் தலைமறைவு; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை காட்பாடி அருகே சோகம்
1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!