SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குரோம்பேட்டை - திருநீர்மலை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற பரிசீலிக்கப்படும் :அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு!!

2022-04-28@ 11:01:04

சென்னை : நெல்லை - தென்காசி 2 வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தமிழக அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார். அவர் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பின்வருமாறு, 'நெல்லை - தென்காசி 4 வழிச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்காசியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

குரோம்பேட்டை - திருநீர்மலை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற பரிசீலிக்கப்படும். ஓமலூர் இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். நெடுஞ்சாலைகளில் உள்ள தரைப்பாலங்களை, மேம்பட்ட பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தருமபுரி - ஒகேனக்கல் சாலையை ஆராய்ந்து முதல்வர் அனுமதியோடு விரிவுபடுத்த இந்த ஆண்டே நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் ஓசூர் - தனி சாலையை விரிவுபடுத்தும் பணி இந்த ஆண்டே முடிக்கப்படும்,'என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்